வடலி

யோ.கர்ணனின் கதைகள் முழுமையான யுத்தசாட்சியத்தின் தவிர்க்கவியலாத ஒரு கூறு – நிலாந்தன்
கர்ணன் நாலாங்கட்ட ஈழப்போரின் யுத்த சாட்சிகளில் ஒருவர். நாலாங்கட்ட  ஈழப்போர் உயிருள்ள வௌிச்சாட்சிகள் இன்றி நடத்தி முடிக்கப்பட்டது. சக்தி  மிக்க அரசுகளின் சற்லைற் கமராக்களைத் தவிர வேறெந்த வௌிச்சாட்சிகளும்  அங்கிருக்கவில்லை. மற்றவையெல்லாம் யுத்த களத்தில் நின்ற உட்சாட்சிகளே.  இதில் ஒரு தரப்பு வெற்றிக்களிப்பினால் தனது செயல்களைக் தானே தனது கைபேசிக்  கமராக்களால் பதிந்து வைத்திருக்கிறது.மற்றத் தரப்பு தியாகிகளும் கைதிகளும்  அகதிகளும் ஆகியது. இவர்கள் மத்தியிலிருந்தே கர்ணன் உருவாகினார்.  பெரும்போக்காகவுள்ள யுத்த சாட்சியத்திலிருந்தும் அவர் துலக்கமாக விலகிச்  செல்கிறார். ஆனாலும் முழுமையான யுத்த சாட்சியம் என்று வரும்போது அதன்  தவிர்க்கவியலாத ஒரு கூறாக  அவர் காணப்படுகிறார்.

இவரையும் இவரைப் போன்றவர்களையும் இணைத்து உருவாக்கப்படும் முழுமையான யுத்த  சாட்சியமே விஞ்ஞான பூர்வமானதாகவும் அனைத்துலகக் கவர்ச்சி மிக்கதாகவும்  அமையும். அதுதான் தமிழ்த்தேசியத்தின் ஜனநாயக மற்றும் தார்மீக அடித்தளத்தை  பலப்படுத்தும். தமிழர்களின் மீட்சிக்கு தேவையான அனைத்துலக அங்கீகாரத்தை  துரிதப்படுத்தும்.

புத்தகத்தை இணையத்தில் வாங்க

நாம் பேசிக் கொண்டிருந்த போது பெய்திராத மழை புத்தக வௌியீடு

வடலியின் நான்கு நுால்கள் அறிமுக அரங்கு – கனடா
﻿﻿﻿﻿1. அபராதி ( கவிதைத் தொகுதி)

ஆசிரியர் : ஃபஹீமா ஜஹான்

அறிமுக உரை :மயூ மனோ

2. கொலை நிலம் ( முரண் அரசியல் உரையாடல்)

உரையாடியவர்கள் : ஷோபாசக்தி – தியாகு

அறிமுக உரை : அருண்மொழி வர்மன்

3.தேவதைகளின் தீட்டுத்துணி(சிறுகதைத் தொகுதி)

ஆசிரியர் : யோ.கர்ணன்

அறிமுக உரை : கற்சுறா

4.ஈழத்தமிழர்களை யூதர்களுடன் ஒப்பிட முடியுமா?( கட்டுரைத் தொகுதி)

ஆசிரியர் : கலையரசன்

அறிமுக உரை: ரதன்

இடம் -

Scarborough civic centre

150 Borough Drive

Scarborough, Ontario

M1P 4N7

காலம் – 09 Oct 2011 பி.பகல் 3.30 – 6.00 Pm.

தொடர்புகளுக்கு : 647-702-8603

:647 – 896-3036

ஈழத்தமிழர்களை யூதர்களுடன் ஒப்பிடமுடியுமா? – கலையரசன்
சம கால தமிழ் எதிர்ப்பரசியலின் மனநிலையானது பாரதூரமான அளவுக்கு பிளவுண்டிருக்கிறது. அது நவீன உலகத்தின் நிகழ்ச்சிப் போக்கில் இருந்து தன்னை துண்டித்துக் கொண்டிருப்பதோடு மட்டுமல்ல, கடந்து சென்ற வரலாறுகளையும் தமக்கு இசைவான பொருளில் திரித்துப் புரிந்துகொள்கிறது. ஈழம் என்பது இன்று கண்முன்னே வீழ்ந்து கிடக்கும் ஒரு பெருங்கனவாக தமிழர்களுக்கு மாறிவிட்டச் சூழலில் பல்வேறு ஒப்புமைகள் அறிவாளர்களால் எடுத்தாளப்படுகின்றன. அதில் முக்கியமானது, இஸ்ரேல்!

இஸ்ரேல் : யூதர் என்ற ஒப்பீட்டை, ஈழம் : தமிழர்கள் என்றவாரு நிருவ முயலும் எழுத்துக்களும், பேச்சுகளும் அண்மை காலத்தில் அதிகரித்திருக்கின்றன. இதில் சில அடிப்படை உண்மைகளும் இல்லாமல் இல்லை. ஆனால் அப்படி விரும்புபவர்களின் கோணம் என்பது பெரும்பகுதி தூய்மைவாத அரசியலில் இருந்தும், அமெரிக்க சார்பு நிலையில் இருந்தும் வெளிப்படுவதை காண்கிறோம்.

இத்தகைய அம்சங்களை உள்ளடக்கி கலையரசன் எழுதியிருக்கும் இந்தப் புத்தகமானது, இஸ்ரேலும், ஈழமும் பொருந்திப்போகும் மற்றும் விலகிச் செல்லும் புள்ளிகளை வரலாற்று நோக்கில் அணுகுகிறது. இந்த பேசுபொருளை ஒரு மைய அச்சாகக் கொண்டு உலக அரசியலையும் ஆழமான நோக்கில் விவரிக்கும் இந்நூல் ஈழத் தமிழ் அரசியல் ஆய்வாளர்கள் உடனடி கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்று!

- வடலி வெளியீடு

புத்தகத்தை வாங்க  இங்கே செல்லவும்

சாவு சோறு தின்றவன் சொன்ன கதைகள் – இமையம்
கடந்த கால் நூற்றாண்டுகளுக்குமேல் தமிழ்மொழியில் எழுதப்பட்ட  இலக்கியப்படைப்புகளில் உயிரோட்டமுள்ள படைப்புகள், அன்றாட வாழ்வின்  நெருக்கடிகளை பாசாங்கு இல்லாமல் எழுதிய படைப்புகள் என்று ஈழத்து படைப்புகளை  மட்டுமே சொல்ல முடியும்.  ஈழத்தில்தான் வாழ்வதற்கான நெருக்கடிகள் இருந்தன.   அடுத்த கணத்தில் உயிருடன் இருப்போமா, யார் உயிருடன் இருப்பார்கள், யார்  இறப்பார்கள் என்ற நிச்சயமில்லாத வாழ்க்கை, அடுத்த கணத்தை உயிருடனிருந்து  எப்படி எதிர்க்கொள்வது என்ற சவால் ஈழத்தில் இருந்ததால் அங்கு இலக்கியம்  படைக்கப்பட்டது.  தமிழ்நாட்டில் வாழ்வதற்கான நெருக்கடிகள் இல்லை,  போராட்டங்கள், சவால்கள் இல்லை.  அதனால் இங்கு வீரியமான இலக்கியப்படைப்புகள்  உருவாகவில்லை.  அதனால் தமிழ்நாட்டு எழுத்தாளர்கள் நகல் எடுக்கிற, போலி  செய்கிற வேலைகளில் ஈடுபட்டார்கள்.  நகல் எடுக்கிற, போலி செய்கிற  வேலையைக்கூட நிறைவாகச் செய்யவில்லை.

1980-க்குப்  பிறகு ஈழத்தில் எழுதப்பட்ட படைப்புகள் தமிழ்நாட்டிலிருந்த வாசகர்களை,  படைப்பாளிகளை முற்றிலுமாக நிலைகுலைய செய்தவை.  ஈழப்படைப்புகளின் வழியாக  அனுபவித்த – துயரங்களை எளிதில் மதிப்பிட முடியாது.  தமிழ்நாடு ஈழத்துக்கு  முழுமையாக ஆதரவு கொடுத்த நேரம் அது.  இலங்கை பேரினவாத அரசின் கொடூர  முகத்தையும் நடவடிக்கைகளையும் அறிந்து வேதனைப்பட்ட காலத்தில்தான் ஈழ  விடுதலைப்போராட்ட இயக்கங்களின் நடவடிக்கைகள் குறித்து வந்த படைப்புகள்  பேரதிர்ச்சியை ஏற்படுத்திற்று.  கோவிந்தனின் “புதியதோர் உலகம்” என்ற நாவல்  ஈழ விடுதலைப்போராட்ட இயக்கங்களின் ஒரு முகத்தைக் காட்டியது.  அதையடுத்து  விடுதலைப்போராட்ட இயக்கங்களின் இன்னொரு முகத்தைக் காட்டியது ஷோபா சக்தியின்  “கொரில்லா”, “ம்”. இந்த நாவல்கள் தந்த அதிர்ச்சி விவரிக்க முடியாதது.  எது  நிஜம்?

சேரன்,  வ.ஜ.ஜெயபாலன், சோலைக்கிளி, அனார் போன்றவர்கள் காட்டிய உலகம் வேறு.   கோவிந்தன், ஷோபா சக்தி ‘ஈழப்போராட்டத்தில் எனது சாட்சியம்’- மு.புஷ்பராஜா  போன்றவர்கள் காட்டிய உலகம் வேறு.  அண்மையில் வெளிவந்த உமா வரதராஜனின்  “மூன்றாவது சிலுவை” நாவல் காட்டிய உலகம் மற்றவர்கள் காட்டிய உலகத்திற்கு  நேரெதிரானது மட்டுமல்ல முரண்பட்டதும்கூட.  இலக்கிய படைப்புகளின் வழியாக  ஊடகங்கள் வழியாக அறிந்திருந்த ஈழ மக்களின் வாழ்வுக்குறித்த நம்முடைய  எண்ணங்களை, கற்பனைகளை முற்றிலுமாக மாற்றிப்போடுவதாக இருந்தது மூன்றாவது  சிலுவை நாவல்.  கடந்த முப்பது ஆண்டுகளில் ஈழத்திலிருந்து இப்படியான படைப்பு  ஒன்று வந்ததில்லை.  மூன்றாவது சிலுவை-காதல் சம்பந்தப்பட்ட நாவல்.   கிழவனுக்கும் குமரிக்குமான காதல்.  இல்லாதவளுக்கும்  இருக்கப்பட்டவனுக்குமான காதல்.  கிழவனை மகிழ்ச்சிப்படுத்தி குமரிப்பெண்  பெறும் பணம், அதற்கான நாடகம்.  பணத்தை, பொருளை கொடுத்து குமரியோடு உறவு  கொள்ளுதலுக்கான நாடகம்.  மகளின் இளமையை பயன்படுத்தி பணம் பார்க்கும்,  சுகத்தை அனுபவிக்கும் தாய்.  இந்நாவலின் வழியாக தமிழ் வாசகன் அடைந்த  அதிர்ச்சி, ஏமாற்றம் கொஞ்சமல்ல.  இலங்கை பேரினவாத அரசின் கொடூரம் குறித்த,  ஈழ விடுதலைப் போராட்ட சாதக, பாதகமான நடவடிக்கைகள், செயற்பாடுகள், இருபக்கப்  போரினால் பெறப்பட்ட நெருக்கடிகள், மக்கள் பட்ட அவதி குறித்து நாவலில்  எங்குமே பதியப்படவில்லை.  விநோதம்தான். இந்த நாவலைப் படித்த பிறகு மனதில்  ஈழப்போரினால் அகதிகளானவர்கள் யார், உயிரிழந்தவர்கள் யார் என்ற கேள்வி  எழுகிறது.

கோவிந்தன்,  ஷோபா சக்தி, சக்ரவர்த்தி, சேரன், ஜெயபாலன், உமா வரதராஜன், சோலைக்கிளி,  அனார், மு.புஷ்பராஜா போன்றவர்கள் காட்டிய உலகிற்கு நேர் எதிரான முற்றிலும்  புதிய ஒரு உலகத்தை- மரணத்தின் வாசனை என்று சிறுகதைத் தொகுப்பில் த.அகிலன்  காட்டியிருக்கிறார்.  அதாவது போர் தின்ற சனங்களைப் பற்றிய கதைகள்.  ஈழ  படைப்பாளிகள் யாரும் காட்டாத ஒரு உலகத்தை த.அகிலன் காட்டுகிறார்.  இது  அசல்.  நகல் எடுத்ததோ போலி செய்ததோ அல்ல.  இது கதை அல்ல.  நிஜம்.   வாழப்பட்ட வாழ்க்கையிலிருந்து ஒரு பகுதியை எடுத்து அதற்கு மொழி வழியாக  வடிவம் கொடுக்கப்ட்டது.  மரணத்தின் வாசனை தொகுப்பிலுள்ள கதைகளில்  விவரிக்கப்பட்டுள்ள காட்சிகள் மனதிலும் கண்களிலும் கற்சிற்பமாக நிற்கிறது.   பொதுவாக போர் தின்ற சனங்களைப் பற்றிய கதைகள்தான் என்றாலும், தன் சொந்த  மனிதர்களை பறிகொடுத்த இழப்புகளின் வழியாக கதை சொல்லப்படுகிறது.  ஏழு  வயதிலிருக்கிற சிறுவன் 20 வயதுக்குள் சந்திக்கிற மரணங்களின் காட்சிகளே  இச்சிறு கதைகள்.

மரணத்தின்  வாசனை தொகுப்பின் முதல் கதை ‘ஒரு சின்னப்பையனின் அப்பா செத்துப்போனார்’  என்பது.  போர் என்றால் என்ன, மரணம் என்றால் என்ன, எதற்காக, எப்படி போர்  நடக்கிறது என்று தெரியாத வயதில் ஒரு சிறுவன் தன் தந்தையை போருக்கு தின்னக்  கொடுக்கிறான்.  ஏழு வயது குழந்தை இயற்கையாக அல்ல போரினால்- பீரங்கியால்  கொல்லப்பட்ட தன் தந்தையின்-உடலை, பிணத்தைப் பார்த்து என்ன  நினைத்திருக்கும்.  அந்த பிஞ்சு உள்ளத்தின் துயரினை மொழி தாங்குமா,  சொல்லுமா என்பது சந்தேகமே.  நிஜமான வாழ்க்கையை பதிவு செய்யும்போது வாழ்வின்  பலம்தான் அதன் உண்மைதான் முதன்மை பெறுகிறது.  மொழி இரண்டாம்பட்சமாகிறது.   அது கவிதையாக இருந்தாலும்.  ‘ஒரு ஊரில் ஒரு கிழவி’ என்ற கதையிலும் மொழி,  சொற்கள், வார்த்தைகள் என்பது ஒரு ஊடகம் மட்டுமே என்பதை வாசகனால் எளிதில்  உணர முடியும்.  தான் வாழ்ந்த, தன்னை வாழ வைத்த மண்ணைவிட்டு பிரிய முடியாமல்  தவிக்கிறாள் ஒரு கிழவி.  விமான குண்டு விச்சுகளுக்குப் பயந்துகொண்டு ஊரே  காலியாகிவிடுகிறது.  ஆனால் கிழவி போகவில்லை.  மண்ணும், சாமியும் தன்னை  காக்கும் என்று நம்புகிறாள்.  சாமி தனிமையில் கிடக்குமே என்று  கவலைப்படுகிறாள்.  தனிமையில் கிடக்கிற சாமியை அவள்தான் உருவாக்கினாள்.   மனிதர்கள் இல்லாத இடத்தில் தெய்வங்களுக்கு என்ன வேலை?  கிழவியை சாமி  காப்பற்றவில்லை.  விமான குண்டு வீச்சில் கிழவியின் உடல் கூழாகிவிடுகிறது.   சாமி சிலையும் துண்டு துண்டாகச் சிதறிப்போய்க்கிடக்கிறது.  கிழவி செய்த  குற்றம் என்ன? அவளை ஏன் போர் தின்றது என்ற கேள்வியை ஒற்றை வரியில்  கேட்காமல் ஒரு கதையாக்கியிருக்கிறார் த.அகிலன்.  கேள்வியை கதாசிரியன்  கேட்கவில்லை.  வாசகன் கேட்கிறான்.  ஒரு படைப்பு என்பதும், படைப்பின் வெற்றி  என்பதும் வாசகனை கேள்வி கேட்க வைப்பதும் கதையில் பங்கேற்பாளானாக  மாற்றுவதும்தான்.  அது மரணத்தின் வாசனைத் தொகுப்பில் சிரமமின்றி  நடந்திருக்கிறது.

விலங்கினங்களிலேயே  பாவப்பட்ட விலங்கினம் மனித இனமாகத்தான் இருக்க முடியும்.  அதற்குத்தான்  ஆசைகள், கனவுகள், ஏக்கங்கள், நோக்கங்கள், கொள்கைகள், தத்துவங்கள்  இருக்கிறது.  எல்லாவற்றையும்விட இடத்தின்மீதான ஆசை இருக்கிறது.  ‘குமார்  அண்ணாவும் மிளகாய் கண்டுகளும்’ என்ற கதையில் இதைத்தான் நாம் பார்க்கிறோம்.   ஒரு விவசாயி தன் பெண்டாட்டி, பிள்ளைகளைவிட அவன் உருவாக்கியப்  பயிர்களைத்தான் அதிகமாக நேசிக்கிறான்.  அந்தப் பயிர்களைக் காப்பதே தன்  வாழ்க்கை என்று கருதுகிறான்.  தன் நிலமே தன் வாழ்வு என்று வாழ்கிற,  நிலத்தைவிட்டு பிரிந்தால் செத்து விடுவோம் என்று எண்ணுகிற ஒரு மனிதனின்  மனதை கதையில் பதிய வைப்பது சாத்தியமல்ல.  விமான குண்டுகளுக்கு, பீரங்கிக்  குண்டுகளுக்கு பயந்துகொண்டு முகமறியாத, முன்பின் தெரியாத திசையில்  மனிதர்கள் ஓடிக்கொண்டிருக்கிற நேரத்தில் வயலில் தான் நட்டு வளர்த்த மிளகாய்  செடிகள் தண்ணீரில்லாமல் கருகிவிடுமே என்ற கவலையில் சுடுகாடுமாதிரி  மாறிவிட்ட கிராமத்திலிருக்கிற  வயலுக்கு வருகிற ஒரு மனிதன்  பைத்தியமாக்கப்படுகிறான்.  பைத்தியமாகிவிடுகிறான்.  குமார் என்ற மனிதனை எது  பைத்தியமாக்குகிறது.  மிளகாய்க்குத் தண்ணீர் பாய்ச்சுவது குற்றமா?  இந்தக்  குற்றத்திற்காகவா ராணுவம் அவனை பிடித்துச் சென்று சித்ரவதை செய்து  பைத்தியமாக்குகிறது.  மனிதர்களை மொத்த மொத்தமாக விஷவாயு குண்டுகளை  வீசிகொல்கிறவர்களுக்குப் பதக்கம்.  சமூக அந்தஸ்து.  வீரன் என்ற பட்டம்.   மிளகாய் செடிக்கு தண்ணீர் பாய்ச்சப் போகிறவனுக்கு துப்பாக்கி ரவையின்  மூலம் மரணம் பரிசாக அளிக்கப்படுகிறது. இப்படியான பரிசை கொடுக்கிற மனித  இனத்தைவிட கேவலமான விலங்கு உலகில் வேறு என்ன இருக்க முடியும்?

‘சித்தி’  கதையில் வருகிற சித்திக்கு ஈழ மண்ணில் வாழ்ந்துகொண்டிருந்தவர்கள் எத்தனை  வகையான கொடுமைகள் அனுபவித்தார்களோ, அத்தனையும் அவளுக்கும் உண்டு.  அதைவிட  கூடுதலாகவும் உண்டு.  அவள் செய்த பாவம் நல்ல பெண்ணாக இருந்தது மட்டுமே.   மற்றவர்களை அனுசரித்துபோனது, பிறர் மனம் புண்படாமல் நடந்துகொண்டது,  மற்றவர்களை சிரிக்க வைத்தே பழகியதுதான் அவள் செய்த குற்றம்.   ஏமாற்றிவிட்டுபோன காதலன் வருவான் என்ற நம்பிக்கையில் போர் விமானங்கள்  வீசும் குண்டுகளுக்கு மத்தியில், பீரங்கி குண்டுகளுக்கு மத்தியில் பதுங்கு  குழியில் காத்திருக்கிறாள்.  இந்தக் காத்திருப்பு எவ்வளவு துயரமானது?   காதலனின் வருகைக்காக ஜோசியக்காரியை நம்பிக்கொண்டிருக்கிறாள்.  பாவம்  ஜோசியக்காரி என்ன செய்ய முடியும்?  பணம் பறிப்பதைத்தவிர.  அதைத்தான் அவள்  செய்து கொண்டிருக்கிறாள்.  அவளும் உயிருடன் இருக்க வேண்டும் அல்லவா?  துர்க்கை அம்மனை சித்தி நம்புகிறாள்.  கோபம் கொண்டசாமி, துர்தேவதையான  துர்க்கை அம்மான் சுக்கு நூறாகிக்கிடக்கிறது.  ஆக்ரோசம் கொண்ட காளியும் போன  இடம் தெரியவில்லை.  மரணம் மனிதர்களை மட்டுமல்ல சாமிகளையும்  துரத்திக்கொண்டிருக்கிறது. சித்தியை தன் கோர பசிக்கு போர்  எடுத்துக்கொண்டுவிட்டது.  சித்திப் போன்று பல ஆயிரக்கணக்கான அப்பாவி  மனிதர்கள் கொல்லப்படுகின்றனர்.

த.அகிலனின்  கதைகளில் மனிதர்கள் கொல்லப்பட்டுக் கொண்டேயிருக்கிறார்கள்.  அதோடு காணாமல்  போகிறார்கள்.  காணாமல் போகிறவர்களுக்குக்கூட தாங்கள் காணாமல்  போயிருக்கிறோம் என்பது தெரியவில்லை.  காணாமல் போனவர்களை மருத்துவமனையின்  பிணவறைகளில்தான் தேட வேண்டி இருக்கிறது.  குவிக்கப்பட்டுள்ள  பிணங்களுக்கிடையில், குவிக்கப்பட்டுள்ள எலும்புகளுக்கிடையில் தங்கள்  உறவினர்களுடைய பிணம் இருக்கக்கூடாது என்ற எண்ணத்தோடுதான் எல்லாரும்  தேடுகிறார்கள்.  தங்களுடைய ஆசையில் வெற்றிப்பெற்றவர்கள் என்று ஒருவரையும்  காட்ட முடியாது.  தாயை, தந்தை, சகோதரனை, குழந்தைகளை, உறவுகளை  பறிகொடுத்தபடியே இருக்கிறார்கள்.  இழப்பின் வலியை பொறுக்க முடியாமல்  கதாசிரியர் கேட்கிறார் “போரை யார் கொண்டுவந்தது?”  இந்தக் கேள்வி ஒவ்வொரு  கதையிலும் திரும்பத் திரும்ப கேட்கப்படுகிறது.  இக்கேள்விக்கு யாரிடம்  இருக்கிறது பதில்?

எந்தக்  கணம்வரை உயிருடன் இருப்போம் என்று தெரியாது.  தன்னுடன் இருக்கும்  மனிதர்களில் யார் எப்போது காணாமல் போவார்கள் என்பது தெரியாது.  விமான  குண்டு வீச்சில், பீரங்கி குண்டு வீச்சில் யாருடைய உடல் கூழாகும் என்பது  தெரியாது.  யாரை எப்போது ராணுவம் பிடித்துக்கொண்டுபோகும் என்பதும்,  பிடித்துக்கொண்டுபோன மனிதனை விடுவார்களா என்பதும் தெரியாது.  ஒவ்வொரு ஊராக,  ஒவ்வொரு இடமாக எத்தனை காலத்திற்கு மாறிமாறி சென்றுகொண்டே இருக்க வேண்டும்  என்பதும் தெரியாத நிலையில், அடுத்தவேளை சோறு சாப்பிட முடியுமா என்பதுகூட  தெரியாத நிலையில் ஒரு மனிதனுக்கு பைத்தியம் பிடிக்காமல் (விசர்)  இருந்தால்தான் அதிசயம்.  ’தோற்ற மயக்கங்களோ’ – கதையில் அகிலனின் அண்ணனுக்கு  பைத்தியம் பிடித்துவிடுகிறது.  பைத்தியம் பிடித்ததற்கு அவனா காரணம்?   தலைக்குமேலே குண்டு வீச விமானம் பறந்து கொண்டிருக்கிற சத்தம் ஓயாமல்  கேட்டுக்கொண்டிருக்கிறது. சுற்றிவளைத்திருக்கிறது ராணுவம்  துப்பாக்கிகளுடன், பீரங்கிகளுடன்-  ஆனாலும் மனிதர்கள் உண்டார்கள்,  உறங்கினார்கள் முன்பின் தெரியாத ஊர்களுக்கு ஓடினார்கள். செத்துப்போனார்கள்.   மரணங்கள் பல மாதங்களுக்கு பிறகே அறிவிக்கப்படுகின்றன.  அதுவும்  குறுஞ்செய்தியாக.  ‘நீ போய்விட்ட பிறகு’ என்ற கதையில் வரும சம்பவங்கள் மனதை  உறையவைக்கின்றன.  நாம் எப்படிப்பட்ட காலத்தில், எப்படிப்பட்ட  சமூகச்சூழலில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என்ற கேள்வி முக்கியமானது.   இக்கேள்வியைத்தான் த.அகிலன் தன் வலியின் வழியே, தன் எழுத்தின் வழியே  கேட்கிறார்.  நம்மால் வெட்கப்பட மட்டுமே முடியும்.

மரணத்தின்  வாசனை தொகுப்பிலுள்ள எல்லாக் கதைகளுமே போரில் வென்றவர்களைப்பற்றிப்  பேசவில்லை, போரில் தோற்றவர்களைப் பற்றியும் பேசவில்லை.  இருபக்கப்போரிலும்  மாண்டவர்களைப் பற்றி, போர் தின்றவர்களுடைய கதையைப் பேசுகிறது.  ஒரு  மரணத்திற்காக அழுது கொண்டிருக்கும்போது அடுத்த மரணம் நிகழ்கிறது.  அந்த  மரணத்தை அடுத்து அடுத்த மரணம்-அடுத்தடுத்து மரணங்கள் நிகழும் காலத்தில்  எந்த மரணத்திற்காக அழுவது?  சாவு மட்டுமே சொந்தம், மரணம் மட்டுமே  எஞ்சியிருக்கிறது என்ற சூழலில் வாழ்ந்த, செத்த மனிதர்களுடைய கதைகள் எனலாம்.   தினம்தினம் மனிதர்களை சாகக் கொடுத்துவிட்டு வாழ்ந்த ஒருவன் சொன்ன கதைகள்.   விவரணைகளாக, விளக்கங்களாக இல்லாமல் வாழ்க்கை அனுபவமாக இருக்கிறது.  போர்  என்றால் வெற்றி, வீரம், பெருமை, கௌரவம், பட்டம், பதக்கம் இதைத்தான் நாம்  போற்றி வந்திருக்கிறோம்.  இதைத்தான் நாம் வரலாறாக்கி குழந்தைகளுக்கு பாடமாக  சொல்லித் தருகிறோம்.  போருக்கு சம்பந்தமில்லாத போரினால்  செத்தவர்களைப்பற்றி, அகதியாக்கப்பட்டவர்களைப் பற்றி நாம் பேசுவதில்லை.   உலகமெங்கும் மனிதர்கள் போரினால் கொல்லப்படுவதுமட்டுமல்ல,  அகதிகளாக்கப்பட்டுக் கொண்டேயிருக்கிறார்கள்.  மனிதர்களுடைய மரணங்கள்  மரணங்கள் அல்ல.  இன்று வெறும் எண்ணிக்கையாகிவிட்டது.

போர்கள்  எதன் பொருட்டு நடத்தப்படுகின்றன?  மனிதர்களை கொன்று குவித்துவிட்டு  அடையப்பெறும் வெற்றிக்கு என்ன அர்த்தம் இருக்க முடியும்?  போர் மனிதர்களை  அகதிகளாக்கியது.  பெயர் தெரியாத ஊர்களுக்கு விரட்டியடித்தது.  மொழி தெரியாத  நாட்டில் வாழ வைத்தது.  உறவுகளைப் பிரித்தது.  பெற்றோர்களிடமிருந்து  குழந்தைகளையும், குழந்தைகளிடமிருந்து பெற்றோர்களையும் பிரித்தது.   குழந்தைகள் இறந்தன.  பெற்றோர்கள் இறந்தார்கள்.  ஊமையாக்கப்பட்டார்கள்.   காணாமல் போனார்கள்.  பைத்தியம் பிடித்து அலைகிறார்கள்.  இத்தனை  கொடூரங்களுக்கு பிறகும் போர் நடக்கிறது.  யாருக்கான, எதற்கான போர்,  அந்தப்போர் தேவையா என்று த.அகிலன் தன் கதைகளின் வழியே கேட்கிறார்.  மனித  சமுதாயம் பதில் சொல்ல வேண்டிய கேள்வி.

ஒரு  இலக்கியப்படைப்பின் வெற்றி, பலம் என்பது அப்படைப்பில் இருக்கும் உண்மையைச்  சார்ந்தே நிர்ணயமாகும். த.அகிலனின் மரணத்தின் வாசனை-போர் தின்ற சனங்களின்  கதை- சிறுகதைத் தொகுப்பு- ஒரு இலக்கிய படைப்பு.

நன்றி

மணற்கேணி – இமையம்

http://manarkeni.blogspot.com/2011/07/blog-post_8898.html?spref=tw

கருணாகரனின் ‘பலிஆடு’ -முல்லைஅமுதன்
கவிஞர்.கருணாகரன் நமக்குத் தந்திருக்கும் மூன்றாவது    கவிதை நூல் ‘பலிஆடு’ ஆகும்.

‘..உனனை என்னுள் திணிப்பதையும்

என்னை உன்மீது ஏற்றுவதையும் வெறுக்கிறேன்

உன் மகிழ்ச்சியை நீயே பாடுவதிலும்

என் பாடலை நானே இசைப்பதிலும்

ஆனந்தமுண்டல்லவா?…’

கவிஞர் முதல் நூலின் முதல் கவிதையுடன் தன்னை அறிமுகம் செய்தாலும் கவிஞருக்கு    அறிமுகம் தேவையற்றது. ஏற்கனவே ‘வெளிச்சம்’ சஞ்சிகை மூலமும், தமிழீழ தேசிய    தொலைக்காட்சியிலும் முக்கிய பொறுப்பில் இருந்தவர். உலக இலக்கியங்களில் அதி    தீவிரம் காட்டியவர். நல்ல இலக்கிய முயற்சிகளுக்கு ஆதரவாக இருந்தவர்.எனக்கு    சுந்தரராமசாமியின் எழுத்துக்களை அறிமுகம் செய்து வைத்தவர். இவரின் கவிதைகள்    வாழ்வின் அணைத்து பரிமாணங்களையும் உள்வாங்கிய படி எழுதப்பட்டிருக்கிறது.    காலடிக்குள் நழுவிப்போகும் வாழ்வின் வசந்தங்கள்..கைகளுக்குள் அகப்படாமல்    விலகிப்போகும் சுதந்திரம்..வண்ணாத்திப்பூச்சியை தேடி ஓடும் குழந்தையை பதுங்கு    குழிக்குள் அடைக்கின்ற சோகம்,வீரியன் பாம்பு நகரும் போதும்…குண்டுகள் வீழ்கின்ற    வழவுக்குள் இருளில் அருகாய் கேட்கின்ற துப்பாக்கி வேட்டுக்கள்…எது    வாழ்க்கை?எங்கே வாழ்வது?பசிக்கின்ற வயிற்றுக்கு உணவு எங்கே?எல்லாவற்றுக்கும்    மேலான சுதந்திரம் பற்றிய சிந்தனை அறவே அற்று வாழ்வா சாவா என்கிற ஓட்டத்தில்    நின்று நிதானித்து கவிதை பாடும் நேரப் பொழுதை ஒதுக்க முடியுமா? அதற்குள்ளும்    தன்னை பதிய வைக்கின்ற முயற்சிக்கிற ஒரு கவிஞனின் முயற்சியைப் பாராட்டத் தான்    வேண்ட்டும்.

அறுபதிற்குப் பிறகு முகிழ்க்கின்ற நமது நவீன கவிதைப் படைப்புக்கள் தொடர்ச்சியான    வளர்ச்சிப் பாதையிலேயே சென்று கொண்டிருப்பதையே உணர முடிகிறது.மகாகவி முதல் இன்றைய    த.அகிலன் வரை விதைக்கப்பட்டிருக்கிறது எனலாம். ‘உண்மையைக் கண்டறியும் போதும்    அதனோடு இணைந்திருக்கும் போதும் தனிமையும் துயரமும் இயல்பாக வந்து சேர்கின்றன.இந்த    தனிமையும் துயரமுமே என் வாழ்வின் பெரும் பகுதியாகவும் இருக்கின்றது.ஆனாலும் இது    பேராறுதலைத் தருகின்றது….’என கவிஞர் சுதாகரிப்பதும் தெரிகிறது.

‘என்னுடைய புன்னகையைத் தந்துவிட்டு

எல்லோருடைய கண்ணீரையும்

எடுத்துச் செல்கிறேன்.

மாபெரும் சவப்பெட்டியில்

நிரம்பியிருக்கும் கண்ணீரை போக்கி விடுகிறேன்.

கள்ளிச்செடிகள் இனியில்லை.

காற்றுக்கு வேர்களில்லை.

ஒளிக்குச் சுவடுகளிலை.

எனது புன்னகை

நிலவினொளியாகட்டும்.’

இவரின் முதல் இரண்டு (ஒரு பொழுதுக்கு காத்திருத்தல்(1999),ஒரு பயணியின்    நிகழ்காலக் குறிப்புகள்.(2003) நூல்களினூடாக தன்னை ஒருமுகமாக ஸ்திரப்படுத்தியபடி    ‘பலிஆடு’ எனும் மூன்றாவது கவிதை நூலுடன் னம்மைச் சந்திக்க வந்துள்ளார்.

‘நிலவெறிக்குது வெறுங் காலத்தில்

வீடுகள்

முற்றங்கள்

தோட்டவெளி

தெரு

எல்லாமே சபிக்கப்பட்டு உறைந்தன போல

அமுங்கிக் கிடக்கின்றன..’

கவிஞனின் கவலை

நமக்கும் வலிக்கவே செய்கிறது..

‘நாங்கள் எதற்கு

சாட்சிகளாக்கப்

பட்டிருக்கிறோம்

அல்லது

எதற்காக

சாட்சிகளாயிருக்கிறோம்..

எனக்கேதும்

புரியவில்லை.

பகலையும் இரவையும்

கண்டு

அஞ்சும் என்

கண்களை

என்ன செய்வேன்..’

போரினுள் அன்பையும் கருனையையும் எதிர்பார்க்கும் உண்மைக் கவிஞனின் வார்த்தை    வடிவங்கள் அவைகள். இன்பங்கள் அணைத்தும் துடைத்தெறியப்பட்டுள்ள சூழலில் துன்பத்தை    மட்டுமே காவியபடி பதுங்குகுழி,காடுகள்,அகதிமுகாம் என வாழ்விழந்து    பலிக்கடாவாக்கப்பட்டிருக்கும் ஒரு மனிதகுலத்தின் விடுதலை எப்போது என்கிற    ஏக்கம்…

‘பூக்கள் இனி எப்படியிருக்கும்

மரங்கள் மிஞ்சியிருக்குமா

பறவைகளின் சிறகுகளில்

சாவு வந்து குந்திக் கொண்டிருக்கும்

காலம் இதுவல்லவா…’

‘நாடு கடக்க முடியவில்லை

சுற்றி வரக் கடல்

சிறைப் பிடிக்கப்பட்ட தீவில்

அலைகளின் நடுவே

துறைமுகத்தில்

நீண்டிருக்கும் பீரங்கிக்கு

படகுகள் இலக்கு.

மிஞ்சிய பாதைகளில்

காவலர் வேடத்தில் கொலையாளிகள்..

குற்றமும் தண்டனையும் விதிக்கப்பட்ட

கைதியானேன்…’

ஒவ்வோரு முறையும் தப்பி ஓடுதல் ஆபத்தானது.சுடப்படுவர்.கடலுக்குள் மூழ்கடிக்கப்    படுவர்.கைதியாக்கப்படுவர்.

‘எனது மொழி என்னைக் கொல்கிறது

மொழியொரு தூக்கு மரம்

என்றறிந்த போது

எனது தண்டனையும் ஆரம்பமாயிற்று

எனது குரல்

என்னை அந்தர வெளியில் நிறுத்துகிறது

விரோதியாக்கி…’

நமது சாவு நம்மை நோக்கி வருகிறது அல்லது நாமே அதை நோக்கி நகர்கிறோம்.முப்பது    வெள்ளிக்காசுக்காய் யேசுவைக் காட்டிக் கொடுத்த யூதாஸ் ஒருபுறம்…உலக    வல்லாதிக்கப் போட்டிகளில் அழிகிறது எம் பூமி..இரத்தவாடை வீசுகின்ற நிலத்தில்    நிமிடத்திற்கொரு பிணம் வீழ்கிற கொடுமைக்கு விதியா காரணம்?

எமக்கான நிலத்தில்,எமக்கான கடலில் வாழ்வுக்கான தேடலை சுதந்திரமாக தேட முடியாத    அவலம்….கொடுமையிலும் கொடுமை! முகம் தெரியாத துப்பாக்கிகளின் விசையை அழுத்தும்    வேகத்தில் மனிதம்…

‘யாருடயதோ சாவுச் செய்தியை

அல்லது கடத்தப்பட்டதான

தகவலைக் கொன்டுபோகக்

காத்திருந்த தெரு…’

….’சொற்களை முகர்ந்து பார்த்த நாய்கள்

விலகிச் சென்றன அப்பால்

கண்ணொழுக..

பாம்புகள் சொற்களினூடே

மிக லாவகமாய் நெளிந்து சென்றன

நடனமொன்றின் லாவகத்தோடு…’

சொற்கள் சுதந்திரமாய்    விழுந்திருக்கின்றன. அணைத்து விஞ்ஞான பரீட்சாத்தங்களும் பரீட்சித்து    பார்க்கப்படுகின்ற பூமி எங்களது. பலஸ்தீனம் பற்றி பேசத் தெரிந்த பலருக்கு நமது    பலம், பலவீனம், கொடூரம், சோகம் தெரியாதது மாதிரி இருப்பது தான் வலிக்கிறது. மனு    நீதி சோழனின் வருகை எதுவும் நடந்துவிடவில்லை.

...’வானத்தை நான் பார்க்கவில்லை

நட்சத்திரங்களையும் காணவில்லை

பதுங்கு குழியின்

இருளுக்குள் வீழ்ந்த வாழ்வின்

சருகு நான்….

….. நிலம் அதிர்கிறது.

குருதியின் மணத்தையும்

மரணத்தின் அருகாமையையும் உணர்கிறேன்

கந்தகநெடில்

கபாளத்தைப் பிளக்கிறது

வீரர்கள் முழங்கிக் கொண்டேயிருக்கிறார்கள்

அழியும் வாழ்வின் பிரகடனத்தை

ஒவ்வொரு துப்பாக்கியிலும்

ஒவ்வொரு பீரங்கியிலும்…’

உண்மையாக,உண்மைக்காக,சொல்லவந்த சேதியை சரியாகச் சொன்ன கவிஞனின் வரலாற்றுப் பதிவு    இந் நூலாகும். உலக ஒழுங்கின் மாற்றத்தால் ஏற்பட்ட அழிவுகளை ஓரளவுக்கேனும் தன்    மொழியில் சொல்லியுள்ள கருனாகரன் ‘பலிஆடு’ போன்று தொடர்ச்சியாக நூல்களைத்    தருவதனால் உலகம் தன்மௌனம் கலைக்கலாம். அன்று தொட்டு இன்று வரை வீச்சுள்ள    படைப்புகளை போருக்குள் வாழ்ந்த எழுத்தாளர்களே தந்துள்ளார்கள்.புதுவை.    இரத்தினதுரை, தீபச்செல்வன்,சித்தாந்தன், வீரா,அமரதாஸ், த.அகிலன் என கருனாகரனுடன்    வளர்கிறது. 113 பக்கங்களில் அழகிய வடலி வெளியீடாக (2009) நம் கரம் கிட்டியுள்ள    நூலுக்குச் சொந்தக்காரர்களுக்கு (படைப்பு / பதிப்பு) வாழ்த்துச் சொல்வோம்.

mullaiamuthan_03@hotmail.co.uk

நன்றி

பதிவுகள் – முல்லை அமுதன்

விமர்சனம் – மரணத்தின் வாசனை
மரணமற்ற ஒன்று உண்டெனில்

அது மரணம் தவிர

வேறொன்றுமில்லை”

உயிருள்ளவை என்று அறியப்பட்ட உயிரினங்கள் மட்டும் அல்லாது உயிரற்றவை  என்று அறியப்பட்டவைகளும் ஏதோ வகையில் மரணிப்பது நிச்சயம் என்பது  அறிவியலாளர்களின் கூற்று. மரணம் இயல்பானது. மரணம் தொடர்ந்து கொண்டு வருகிற  வழமைதான் என்றாலும் கூட, மரணம் மிகத் துயரமானதாகவே இருக்கிறது. உறவின்  நெருக்கமே துயரத்தின் அளவை நிர்ணயிக்கிறது. போர் பூமியாகிய ஈழத்தில் பிறந்த  த.அகிலன் எதிர் கொள்ளும் நெருக்கமான உறவுகளுடைய மரணங்களின் வலிகளே  ‘மரணத்தின் வாசனை’ என்ற போர் தின்ற சனங்களின் கதையாகும். “ஈழத்தின்  நீட்சியாக புலம்பெயர் இலக்கியம் உருவாகியது போல் ஈழத்திலக்கியத்தின்  இன்னொரு நீட்சியாக போரிலக்கியம் உருப்பெற்று செழுமைபெற்று வளர்கின்றது. ஒரு  வகையில் போரிலக்கியமும் புலம்பெயர் இலக்கியமும் ஒரு நாணயத்தின் இரு  பக்கங்கள் என்றால் அது மிகையல்ல” என்று கி.பி. அரவிந்தன் முன்னுரையில்  குறிப்பிட்டுள்ளது பொருந்தும்.

இலங்கையில் இனக்கலவரம் தொடங்கிய காலகட்டத்திலிருந்து ஈழத்தமிழர்களின்  வாழ்வு மரணத்துள்ளான வாழ்வாக இன்றும் தொடர்கிறது. பிறக்கின்ற அனைவருக்கும்  மரணிக்கின்ற நிகழ்வு பொதுவான போதிலும், ஈழத்தமிழர்கள் மரணம் எந்த சூழலில்  நிகழ்கிறது என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும். போர்ச் சூழலில் பிறந்த,  மரணத்துள் வாழ்ந்த ஒரு சமூகத்தின் பிரதிநிதியான அகிலன் – தன் பாட்டியை,  தந்தையை, சித்தியை, நண்பனை, நண்பியை, உறவினரை இப்படி, பலரை இழக்கிறார்.  அவர் எதிர்கொண்ட இம்மரணங்களின் வலியின் வெளிப்பாடே மரண்த்தின் வாசனையாகும்.

இக்கதையின் நேரடியான உண்மைத் தன்மை போன்ற மொழிநடை படிப்பவர்களின்  நெருங்கிய உறவுகள் இறந்தது போன்ற துயரத்தை நம் மனதுள் நிகழ்த்துகிறது.  (புனைவுகள் இருப்பினும் அது எந்த வகையிலும் அதன் உண்மைத் தன்மையை  பலவீனமாக்கவில்லை). கதையில் நிகழும் ஒவ்வொரு மரணத்தின் வாசனையையும் நம்மால்  வலிகளோடு நுகர முடிகிறது. கதையில் மரணிக்கும் யாவருக்கும் இயற்கை மரணம்  இல்லை என்பது மிகப் பெரிய அதிர்ச்சியினை நமக்கு அளிக்கிறது. ஈழத்துப்  போர்ச் சூழலில் வாழும் அவர்களிடம் மரணம் பற்றிய, நிலையாமை பற்றிய உலகியல்  தத்துவங்கள் உடைந்து நொறுங்கித்தான் போகின்றன.

வெளிநாட்டு உள்நாட்டு பயணக் கதைகளை கட்டுரைகளை நாம் அனைவரும்  வியப்புடனும் மகிழ்ச்சியுடனும் படித்திருக்கிறோம். ஆனால் மரணங்களைப் பின்  தொடர்கிற இடுக்கண் தருகிற ஒரு பயணத்தை இக் கதைகளின் மூலம் அறிய முடிவது  இதுவரை அறிந்திராத அனுபவமாக மனதிற்குள் உள்ளிடப்படுகிறது. தன் மண்னை, தன்  வீட்டை, தன் காணியை, தன் செல்ல விலங்குகளை நேசிக்கும் அந்த மரணம் தழுவும்  மனிதர்கள் நம் தமிழ்ச் சகோதரர்கள் எனும் செய்தி, நம் துக்கம் அதீதமாக  பீறிடக் காரணமாக அமைகிறது. போரினால் ஏற்படும் மரணத்தின் மூர்க்கமான வாய்,  மனிதர்களை மட்டும் அல்லது விலங்குகளையும் தாவரங்களையும் விழுங்கிச்  சுவைக்கிறது என்பது நம் கண்ணீரில் மேலும் செந்நீரைச் சேர்க்கிறது. தன்  மண்ணை வீட்டை எப்போதும் மனதோடு தூக்கிச் சுமக்கும் இந்த ஈழத்துச் சனங்களின்  வாழ்க்கையை எப்படி மொழிந்தாலும் அதன் துயரங்களை அப்படியே வெளிப்படுத்த  இயலாது என்ற போதிலும் இந்த ஆசிரியர் த. அகிலன் அந்த துயரங்களை இந்த  மரணத்தின் வாசனை மூலமாக எடுத்தியம்புவதில் ஓரளவு வெற்றி பெற்றிருக்கிறார்  என்றெ கொள்ளத் தோன்றுகிறது. ஈழத்தில் இருக்கும் சாதாரண மக்களின் பயம்  மிகுந்த, புலம்பெயர்ந்து கொண்டே இருக்கும் சோக வாழ்க்கையினை தெளிவாக  நமக்குப் படம் பிடித்துக்காட்டுகிறது இந்த நூல்.

கதைமாந்தர்களில் ஒருவராய் இருக்கும் ஆசிரியர் கையாண்டிருக்கும்  நம்பகத்தன்மை உடைய தானே கதை சொல்வது போன்றதொரு மொழிநடை ஒரு வாசிப்பு  அனுபவத்தையும் தாண்டி ஒரு காட்சி வடிவமாகவே நமக்குள் தோன்றுவது அவரின்  மொழிநடைக்கு கிடைத்த வெற்றி என்றே கருத வேண்டும். இக் கதைகளைச் சொல்ல  பயன்படுத்தப்பட்டிருக்கும் மொழிநடை பல இடங்களில் ஈழத்துச் சனங்களின்  வாய்மொழியாகவும், சில இடங்களில் ஒரு கவிதை நடை போலும், ஒரு சில இடங்களில்  கட்டுரை நடை போலும், தேவையான இடங்களில் பூச்சு இல்லாமல்  நிர்வாணத்தன்மையுடனும் விளங்குவது அதன் உண்மைத் தன்மைக்கு அருகில் கொண்டு  சென்று அழகூட்டுகிறது.

பல்வேறு மரணங்களை அருகே இருந்து கண்ட ஆசிரியர் மரணத்தைப் பற்றி ஒவ்வொரு  கதையிலும் கூறி இருப்பவைகள் மூலம் அவருடைய தேர்ந்த சிந்தனைத் திறனை  வெளிப்படுத்துவதாய் இருக்கிறது. சிறுவயதில் நிகழும் மரணங்களைக் கூற  சிறுவனுடைய கண்ணோட்டத்தில் பல இடங்களில் கையாளப்பெற்றிருப்பதும் கதைக்கு  கனம் சேர்க்கிறது. கதையில் குறிப்பிட்ட இடங்களில் நகைச்சுவை  இழையோடியிருப்பது போர்ச் சூழலுக்கு அந்த சனங்கள் பழக்கப்பட்டு போனதையும்  துயரோடு புகல்கிறது.

மரணத்தின் வாசனை நூலில் முதல் கதையாக வரும் ‘ஓர் ஊரில் ஒரு கிழவி’ கதை  மூலமாக போர்ச்சூழலில் தன் ஊரை விட்டு புலம்பெரும் ஆசிரியரின் குடும்பம்  மூலமாகவே ஈழத்து அத்தனைக் குடும்பங்களின் வலியைப் புரிந்து கொள்ள  முடிகிறது. இக்கதையில் தன் பாட்டியின் மரணத்தை வேதனையோடு விவரிக்கிறார்.  அந்த மூதாட்டியின் தன் – மண் மீதான மூன்றாம் கதையின் தலைப்பே துக்கத்தை  தருகிறது. ஒரு மரணம் எப்படி

ஒரு செய்தியாக

ஒரு துயரமாக

ஒரு அரசியலாக ……. மாறிப்போகிறது என்பதை உணர்த்தும் நோக்கத்துக்காகவே  இந்த கதைக்குத் தலைப்பாகவும் ‘செய்தியாக – துயரமாக – அரசியலாக…’ என்ற  தலைப்பு வைக்கப்பட்டிருக்கக்கூடும். இக்கதை ஒரே குடும்பத்தில் நிகழ்ந்த 5  மரணங்களைப் பற்றியது. சீறீலங்கா வான்படை தாக்கி மரணமடைந்த குடும்பங்களில்  இதுவும் ஒன்று. மரணம் எவ்வவளவு இலகுவாக மாறிப்போய் இருக்கிறது ஈழத்தில்  என்பது, ‘மரணம் கிரிக்கட் ஸ்கோரைப்போல அறிவிக்கப் பட்டது’ என்ற வலி மிகுந்த  வரிகள் மூலம் அறியலாம். மரணம் தாங்கிய அந்த குண்டுகளுக்கும் அவர்களும்  என்ன பகை?! ஆனாலும் உயிரை மீதமில்லாமல் குடித்துவிடுகிறது.

நான்காம் கதை – ஒருத்தீ… அந்த தீ என்று சுட்டப்பட்டிருக்கும் ஒருத்தி –  ஒரு விடுதலைப் போராளியாய் இருந்தவள். எப்போதும் துப்பாக்கியை ஏந்தி அலைகிற  அவளுக்குள் எவ்வளவு அன்புள்ளம் விரவிக்கிடக்கிறது என்பது இந்த கதை  முழுவதும் வியாபித்து நிறைந்திருக்கிறது. தன் பால்யத்தில் பூக்களை அதிகம்  நேசிக்கும் இளகிய மனம் படைத்த அந்த ஈழவேணி துப்பாக்கியைத் தூக்கியது  ஆசிரியருக்கு மட்டும் அல்ல, நம்மையும் வியப்பில் ஆழ்த்துகிறது.

பூப்பறித்தாலே

மனசு நோகிற உனக்கு

மரம் தறிக்கிற தெளிவு

யார் கொடுத்தது…?

அதனாலே இப்படி ஒரு கவிதை மூலம் தன் ஐயத்தை வெளிப்படுத்துகிறார். இன்னும்  உன்னிப்பாக நோக்க, அவர்கள் போராட்ட வாழ்க்கை அன்புள்ளம் கொண்டவர்களையும்  துப்பாக்கியை தூக்க வைக்கிற அவசியத்தினை இந்த கதை மறைமுகமாக உணர்த்துகிறது  எனலாம்.

“மந்திரக்காரண்டி அம்மான்டி” என்ற ஐந்தாவது கதையில் ஆசிரியருடைய இளம்  வயது நண்பனின் இழப்பை வலியோடு பகிர்ந்து கொள்கிறார். அதில் சிறுவயதில்  பலபேருடன் நடந்த சண்டைகளை அதனை நியாயப்படுத்தும் விதமாக கூறுமிடத்தில்  போகிற போக்கில் பொருள் நிறைந்த தத்துவங்களை எளிமையாகச் சொல்லவும்  புரியவைக்கவும் செய்வது அருமை. “வன்முறை எப்படிப் பிறக்கிறது நாங்கள்  அவமானப்படுத்தப்படுகிறபோது” என்ற வரிகள் சண்டையை சிறுவர்கள் மட்டும்  முன்வைத்து சொல்லப்பட்டதில்லை என்று தோன்றுகிறது.

அடுத்த கதையான ‘சித்தி’ யில் ஆசிரியருடைய சித்தி பாம்பு கடித்து அல்லது  ‘ஏதோ விச ஜந்து கடித்து, தன் அப்பாவைப் போலவே மருந்து கிடைக்காமல்  சாகிறாள். ஆசிரியரின் பால்ய வயதில் அப்பாவை பறிகொடுத்த அந்தக் கொடுமை  அவருடைய இளவயது வரை தொடர்கிற சோகத்தை கண்ணீரின்றி படிக்கமுடிவதில்லை. புலம்  பெயர்வின் மூலமாக காடுகளில் கூட மனிதர்கள் வசிக்க வேண்டியுள்ளதையும்  அறியத் தருகிறது, இந்தக் கதை. அதனால் விலங்குகள் கோபங்கொண்டு மக்களைத்  தாக்குவது சொல்லப்பட்டிருக்கிறது. ஒரு சின்ன கிராமம் மக்கள் படை எடுப்பால்  திடீரென நகரமாய் மாறும் போது குடிநீர் வசதிகள், மருத்துவ வசதிகள் போன்ற  சுகாதார வசதிகள் குறைந்திருப்பதையும் இக் கதையின் வழி காண முடிகிறது.  அவலங்களே அன்றாடக் காட்சிகளாய் மாறிப் போயிருக்கிறது என்பது துயரிலும்  துயரம்.

“கரைகளிற்கிடையே” என்ற அடுத்த கதையில் தன் நாட்டை விட்டு புலம்பெயர்ந்து  அண்டை நாடு ஆதரவு தரும் என்ற ஆறுதல் தேடி வருபவர்கள் கடலினால்  திண்ணப்படும் அவலத்தைப் பகிர்கிறது.

“குமார் அண்ணாவும் மிளகாய்க் கண்டுகளும்” என்ற கதியில் தன் தோட்டத்தினை  நேசித்த கௌரமான விவசாயி ஒருவன் போரினால் அதனை விட்டு புலம்பெயரும்போது  அவனது வலியை மரணத்தை எடுத்தியம்புகிறது. ஆசிரியரின் புனைநடை மிளகாய்க்  கண்டுகள் வழி அழகாய் வெளிப்படுகிறது.

“நீ போய்விட்ட பிறகு” என்ற கதையில் கவிதை நடைகள் விரவிக்கிடக்கின்றன.  தன் காதலியைப் பற்றிய கதையாக வருவதினால் இயல்பாகவே அது ஏற்பட்டதெனக்  கருதலாம். அன்பும் கோபமும் கவிதை நடை வாயிலாகவே நமக்கு புரிய  வைக்கப்படுகிறது. பொருத்தமாகவும் இருக்கிறது.

“நரைத்த கண்ணீர்” கதை மகனை இழந்தது தெரிந்தும் அதனை ஏற்றுக் கொள்ளாமல் வாழும் பெற்றோர்களின் துயரத்தைப் பகிர்கிறது.

“சலனங்கள் அற்றவனின் கடைசிநாள்” கதை வழி வகுப்பறைகூட போர்ச் சூழலுக்கு பாதுகாப்பற்றது என்ற உண்மையை முகத்தில் அறகிறது.

“தோற்ற மயக்கங்களோ” கதை தன் செல்ல விலங்குகளை அதீதமாக நேசித்தவனை மனநலம்  பாதித்தவனாக புலம்பெயர்வுவாழ்வு ஆக்கியிருப்பது தாங்க முடியா சோகம். போர்  மக்களை மட்டுமல்லாமல், பிற உயிரினங்களையும் பாதிக்கின்ற நிலையும் இக்கதை  பகிர்கின்றது.

இப்படி நாவலா? கட்டுரையா? சிறுகதையா? இது என்ன மாதிரியான இலக்கியம்  என்று குழப்பமான மனநிலையிலே படிக்கப்பட்டாலும் அது தன் இலக்கை அடைந்து  வெற்றியே பெறுகிறது. இளகிய மனம் படைத்தவர்கள் பார்க்க வேண்டாம் என்று பல  திரைப்படங்களைப் பற்றி சொல்லக் கேட்டுப் பார்த்ததுண்டு. ஆனால் சில  நேரங்களில் இந்த கதைகளை இளகிய மனம் படைத்தவர்கள் படிக்க வேண்டாம் என்று  கூறத் தோன்றுகிறது. அந்த அளவு மரணங்களும் அதன் ஓலங்களும் வீரியமுடன்  இந்தகதைகளில் அலைந்து கொண்டிருக்கின்றன. சில இடங்களில் உடல்கள் கூட  எலும்புக் கூடுகளாகத்தான் கிடைக்கின்றன. இருந்தும் நமக்குள் ஏற்படுத்தும்  அதன் பாதிப்பை நிச்சயம் சாதாரணாமானதாகக் கருத இயலாது. மரணம் நம் நாட்டுச்  சூழலில் நமக்கு வேறுவகையானது. ஆனால் நம் ஈழத்துச் சகோதரர்களுக்கு அது  அன்றாட நிகழ்வுகளாகிப் போனதையே இந்நூல் நம்முன் சோகதோடும் வலியோடும்  பகிர்ந்து கொள்கிறது. படித்து முடித்ததும் ஒன்று சொல்ல வேண்டுமானால்  இவ்வாசிரியரின் மொழியாக – மரணம் நாசமாய்ப் போக.

நன்றி

வெற்றிச் செல்வன்

http://www.internationaltamilology.com/home.php

சிறுகதை நூல் விமர்சனம் [மரணத்தின் வாசனை : த.அகிலன்] வாசிப்பு அனுபவம்
இந்தச் சிறுகதை நூலின் முதல் கதையான “ஒரு  சின்னப்பையனின் அப்பா செத்துப்போனார்” என்ற கதை ஏழு வயது பையனின் அப்பா  பாம்பு  கடித்தது. அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்ல இந்திய  இராணுவம் தடுத்ததால் அவர் இறந்த கொடுமையை சொல்கிறது.  “அப்பனில்லாப்பிள்ளைகள் என்கிற இலவச இணைப்பு அனுதாபம் என்னோடு எப்போதும்  கூடவே வந்து அசௌகரியத்தையும் கூடவே அப்பாவின் நினைவுகளையும்  தந்துகொண்டேயிருந்தது” என்ற இதன் கதையின் மையம் அப்பனில்லா  பிள்ளையாக  வளர்ந்து தொலைந்த எனது பிள்ளைபருவத்தை பெருமூச்சுடன் நினைவில் வந்து நெருடி  சென்றது. இந்திய இராணுவம் அமைதிப்படை என்ற பெயரில் சென்றபொழுது அதற்கு  எதிராக தமிழ்நாடு எங்கும்  மாணவர்கள் போராடிய பொழுது அதில் களபணி ஆற்றி,  போராடிய கடந்துப்போன எனது நினைவுகளைக்  கிளறியதால் ஒரே மூச்சில் இந்நூலை  படித்தேன்.

ஆனால் முடியவில்லை. பன்னிரெண்டு கதைகளில் சில கதைகளை  படித்து முடிப்பதற்குள் போரின் இழப்புகள் மனசுக்குள் ஆழமான பாதிப்புகளை  பதித்தது. விட்டு விட்டுத்தான் படிக்க முடிந்தது.போரில் ஈடுபாடு  காட்டாத, போரில் போரிடும் இரு தரப்புகளுக்கும் அப்பால் உள்ள மக்களின்  துயரங்களை இக்கதைகள் சொல்லுகின்றன. த.அகிலன் அவர்கள் ஈழப் போரின் போது  பிறந்து வளர்ந்ததால், அவர் சொல்லும் நெருங்கிய உறவுகள், ஊர்க்காரர்கள்,  பள்ளி நண்பர்கள், இன்ன பிறரின் துயரங்கள், அலைகழிப்புகள், சித்ரவதைகள்,  ஊர்ஊராய் அலைந்தது, உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் அகதிகளானது, கடைசியில்  மரணம் … நம்மை அதிரவைக்கிறது. இந்த மரணங்களின் வாசனை போர் நின்ற  சனங்களின் கதை போரின் கொடூரத்தை நமக்கு உணர்ந்துகிறது.

“குமார்  அண்ணவும் மிளகாய் கண்டுகளும்” கதையில் கிளிநொச்சி சிறு விவசாயி தன்  நிலத்தைப் பிரிந்து அலைந்த சோகத்தை சொல்கிறது. அவர்கள் எல்லாச்  சுகங்களையும், அதிகாரத்தையும், இழந்த இராஜக்களைப்போல் அலைந்த வண்ணம்  இருந்தார்கள் என்கிறார். அந்த மிளகாய் தோட்டத்தை பார்க்க சென்ற அவரை   சிங்கள இராணுவம் சந்தேகத்தின் பேரில் பிடித்து சென்று சித்ரவதை முகாமில்  சிதைத்து குற்றுயிராக்கி அனுப்பினர். அரை நேரத்திக்குள் 300 பாத்தி கட்டக்  கூடிய குமார் அண்ணனின் கைகள் தனக்கான சாப்பாட்டை அள்ளி சாப்பிட முடியாமல்  போய் இறந்த கதை. இப்படி போரில் காணாமல் போனவர்கள், காணாமல்போய்  மீண்டு  வந்தவர்களின் துயரம் நம்மை ஒயாமல் அலைக்கழிக்கிறது.

“நீ போய்  விட்ட பிறகு …” கதை பள்ளிப் பருவத்தில் அரும்பும் முதல் காதலை  கவித்துவத்துடன் சொல்லும் கதை. போர் சூழ்லில் காதல் தரும்  நம்பிக்கை.  போரிலிருந்து தப்பித்து வெளி நாட்டில் வசதியாக காயத்ரி வாழ்வாள் என்று  பிரிவது, பின்பு அவள் இறப்பதை இக்கதைச் சொல்கிறது.  “மரணம்  நாசமாய்ப் போக   அது தேவதைகளையும் விட்டு வைப்பதில்லை”  எனும்போது நாமும் அதை ஆமோதிக்க  வேண்டியுள்ளது.

“கரைகளிற்கிடையே” கதை தமிழக கடற்கரையில்  முடிகிறது. போரிலிருந்து தப்பித்து அம்மா வாழ்ந்த 55 ஆண்டுகளையும், அவன்  வாழ்ந்த 25 ஆண்டுகளையும் ஒரு  கறுத்தப் பையிற்குள் அடக்கி தமிழகத்தை அடைய  கடலில் பயணம் செய்த குடும்பம் கரையை அடையாமல் மணல் திட்டில் மாட்டி  கொண்டனர். அவர்களை காப்பற்ற கடலை நீந்தி கரையை அடைய முயன்ற  தினேஷை  கடல்  சுருட்டி வாரி விழுங்கியது. அந்த குடும்பமே மணற்திட்டில் அலறிய அலறல் உப்பு  காற்றில் இன்னும் ஒலமாய் ஒலித்துக் கொண்டு இருக்கிறது. நமது மனசாட்சிகளை  உலுக்கும் கதை இது.

கோயிலாச்சி, முயல்காதன், சித்தி,  கேசவன், ரூபன் … என்று சொல்லப்படுகின்ற போர் தின்ற மனிதர்களின் கதைகள்  நமது நெஞ்சை பற்றி எரியச் செய்கின்றது. நமக்கு மரணம் என்றால், வயது  முதிர்ந்தோ- நோய்வாய்பட்டோ இறப்பவர்களும், எப்பொழுதாவது விபத்தில் நிகழும்  சிலமரணங்களும் தான் நினைவில் நிழலாடும். இங்கே எல்லாமே அகலாமரணங்கள் . . .   ஒரு மரணத்துக்காக அழுது கொண்டிருக்கையில் அடுத்தது அறிவிக்கப்பட்டது,  அதற்கும் சேர்த்து அழத்தொடங்குகையில், அடுத்த மரணம் அறிவிக்கப்பட்டது.  மரணம் கிரிக்கெட் ஸ்கோரைப்போல் அறிவிக்கப்பட்டது. ஆம். இப்படி மரணத்தின்  கொடுநிழல்கள் படித்த வாழ்வின் அனைத்து அம்சங்களிலும் அது ஊடுருவி  தலையாயானதாக நின்றதை விவரிக்கின்ற இக்கதைகள்.

ஈழத்தின்  மரணங்களை நமது தமிழ்நாடு தினசரிகளில் செய்திகளாக நாம் படித்து  வருத்தப்பட்டுள்ளோம். தொலைக்காட்சிகளில் வரிசை வரிசையாய்  அடுக்கப்பட்டிருக்கும் பிணங்களைக் காண்கின்றோம். நமது பொதுப் புத்தியில்  இவைகள் “மரணச் செய்திகள்” என்பதற்கு மேல் ஒன்றும் பதிவாவதில்லை. நமது  அம்மா, அப்பா, நண்பன், அண்ணன் அந்த பிணக்குவியலில் இருந்திருந்தால் நமக்கு  அப்படி தோன்றாது.  இதைத்தான் அகிலன் இந்த கதைகள் செய்திருக்கின்றன.

30ஆண்டுகளுக்கு  மேலாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் தமிழீழப் போர் தமிழக மக்களிடமும்,  அரசியல்  கட்சிகளிடம் பெரும் அதிர்வலைகளை உண்டு பண்ணின. இருப்பினும்  அரசியல் கட்சிகள் தங்களின் சந்தர்ப்பவாத ஒட்டு அரசியலில் பலமுறை  ஈழப்பிரச்சனைக்கு துரோகம் விளைவித்தன. தமிழக மக்களின் உணர்வுகளை  படிப்படியாக காயடித்தன. இந்த சூழலில் இத்தகைய படைப்புகளின் பணி மிகவும்  முக்கியமானது. மீண்டும் ஈழப்போரின் துயரத்தை தமிழக மக்கள் உணர்ந்து   வீறுகொண்டு எழ இந்த நூல் உதவும்.

அகிலனின் மொழி நடை, கதை  விவரிக்கும் யுத்தி, வாழ்வின் துயரங்களை பிரதிபலிக்கும் சித்திரம், வர்ணனை  அனைத்தும் போரின்  அவலங்களை, மனிதரின் துயரத்தை, பிணம்நாறும் ஊர்களை  மரணவாசனையாக சிறந்த போரிலக்கியமாக நம்முன் ஆசிரியர் நிறுத்துகிறார்.

எனக்குள்ள  மகிழ்ச்சி இந்த போர் பெருந்துயருக்கு எதிராக போராடிய நியாயங்களை எனக்கு  இந்த படைப்பிலக்கியம் தருகிறது. எனக்குள்ள பயம் இப்பொழுது இது தான்! இந்த  கதைகளே நம்முள் பீறிடும் எழும் அழுகையை அடக்க முடியாமல் செய்யும் பொழுது,  முள்ளைவாய்காலில் அலைந்த, பிணவாடையை சுவாசித்தச் சிறுவனோ, சிறுமியோ  நாளைக்கு அவைகளை இலக்கியமாக படைக்கும் பொழுது நம் நெஞ்சு வெடித்து சிதறாமல்  இருக்க  நமக்கு நெஞ்சுரத்தை அளிக்க வேண்டும் என்பதே!

நன்றி – தடாகம் இணைய இதழ்

கி.நடராசன்.

த.அகிலனின்.. ‘மரணத்தின் வாசனை.’ (போர் தின்ற சனங்களின் கதை) – முல்லைஅமுதன் -
ஈழத்தின் மூத்த பத்திரிகையாளரான    ஆர்னல்ட் சதாஸிவம் பிள்ளை எழுதிய சிறுகதையே முதல் கதையென அறிஞர்கள் சுட்டுவர்.    நவீன சிறுகதை 1930ற்கு பின்பே ஆரம்பமாகிறது எனவும் கொள்ளப்படுகிறது.1983ற்குப்    பின்னரே அதிக படைப்பாளர்களின் வருகை நிகழ்ந்துள்ளது.இனக் கலவரம், இடப்பெயர்வு,    பொருளாதார இழப்பு / தடை,  விமானத் தாக்குதல்கள், போக்குவரத்து    அசொளகரியங்கள், உள்ளக / வெளியக புலப்பெயர்வுகள் என்பன படைப்பாளர்களையும்    உருவாக்கியிருக்கலாம். வளர்ந்து வந்த இனச் சிக்கல் பெரும் போராக வெடித்ததில்    போருக்குள் வாழ்ந்த / வாழ்கின்ற / வாழ்ந்து மடிந்த மக்களிடமிருந்து எழுதிய    படைப்பாளர்கள் நிஜத்தை எழுதினார்கள்/எழுத முற்பட்டார்கள். போருக்குள் நின்று    புதுவை இரத்தினதுரை , கருனாகரன் ,நிலாந்தன் , அமரதாஸ், வீரா , திருநாவுக்கரசு ,    சத்தியமூர்த்தி ,புதுவைஅன்பன் ,முல்லைகோணேஸ் , முல்லைகமல் , விவேக் , மலரன்னை    ,மேஜர்.பாரதி , கப்டன்.வானதி என விரிந்து இன்றைய த.அகிலன் வரை தொடர்கிறது.

‘தனிமையின் நிழற்குடை’யைத் தொடர்ந்து நமக்கு அகிலன் தந்திருக்கும் நூலே    ‘மரணத்தின் வாசனை’.போர் தின்ற சனங்களின் கதை என்பதை ஒத்துக் கொள்ளத்தான்    வேண்டும். இதனை ‘வடலி.கொம்’ பதிப்பகம் வெளியிட்டுள்ளனர்.

1.ஒரு சின்னப்பையனின் அப்பா செத்துப் போனார்..

2.ஓர் ஊரிலோர் கிழவி.

3.மந்திரக்காரன்டி அம்மான்டி.

4.குமார் அண்ணாவும் மிளகாய்க் கண்டுகளும்.

5.ஒருத்தீ.

6.சித்தி.

7.நீ போய்விட்ட பிறகு.

8.சலனங்கள் அற்றவனின் கடைசி நாள்.

9.தோற்றமயக்கங்களோ.

10.கரைகளிற்க்கிடையே

11.செய்தியாக துயரமாக அரசியலாக…

12.நரைத்த கண்ணீர்.

என பன்னிரண்டு கதைகளைக் கொண்ட    தொகுதி சிறப்பான தொகுதியாக கொள்ளலாம்.அழகிய பதிப்பு. வெளியீட்டுத் துறையில் ஓர்    மைல் கல்.

சிறுகதைக்கான தொடக்கம் விரிவு உச்சம் முடிவு என படித்த எமக்கு விதியாசமான கதை    நகர்வினைக் கொண்டது. சிறந்த ஆவணப்பதிவு. முழுமையான ஒரு இனத்தின்    வரலாற்றுப்பதிவின் ஒரு சிரு துளி எனினும் நல்ல பதிவு. 83 தொடக்கம் அல்லது இந்திய    இராணுவத்தின் கொடூரங்கள் / மாவிலாறு தொடங்கி முள்ளிவாய்க்கால் வரையான கொடுமைகள்,    இன்று வரை தொடர்கின்ற இன அழிப்பு,அவலம் என்பவற்றின் ஒரு புள்ளி. அவலத்துள்    வாழ்ந்தவனுக்குத்தான் அதன் வலி தெரியும். பதுங்கு குழி வாழ்வு, காடுகளுக்கூடான    பயணம்… ஒவ்வொரு வார்த்தைகளும் நமக்கு களத்துக்குள் அழைத்து செல்லுகின்ற வல்லமை    அகிலனின் கதைகளுக்கு கிடைத்திருக்கின்றது.  பாம்பு கடித்து இறக்கின்ற    தந்தை,கடலில் மூழ்கிப் போகும் இளைஞன்,தான் வாழ்ந்த மண்ணில் மரணிக்கிற கிழவி,தான்    நேசித்த தோழி பற்றிய நினைவின் வலி …. பாத்திர வார்ப்பு அபாரம்.அகிலனின் சொந்த    கதையாகவும் இருக்கலாம்.ஆனால் நமக்கு நடந்தது போல உணர முடிகிறது. அனுபவம் தனக்கு    நடந்தது அல்லது பிறருக்கு நடந்தது.எனினும் நமக்குள் நடந்த நமக்கான சோகத்தை    சொல்லிச் செல்வதால் நெருக்கமாகின்றது.சொல்லடல் இயல்பாகவெ வந்து வீழ்கிறது.எங்கள்    மொழியில் எழுத முடிகின்றதான இன்றைய முயற்சி வெற்றி பெற்றே வருகிறது எனலாம்.சில    சொற்களுக்கான விளக்கங்கள் தரப்பட்டுள்ளனவெனினும் நம் மொழியில் பிறழ்ச்சி    ஏற்படாதவாறு எழுதியுள்ளமை வரவேற்கக் கூடியதே.போரின் கொடுமைகளை அவர்களின் மொழியில்    பேசவேண்டும்.இங்கு அது சாத்தியமானது அகிலனுக்கு கிடைத்த வெற்றி. கதியால் ,    குத்தியாக , திரிக்கிஸ் , குதியன்குத்தும் , அந்திரட்டி, உறுக்கி, கொம்புபணீஸ் ,    புழூகம் ,தத்துவெட்டி, தோறை , எணேய் , நூக்கோணும், அம்மாளாச்சி , ரைக்ரர், விசர்    , மொக்கு , சாறம் , சாமத்தியப்பட்டிட்டாள் … இவைகள் சில விளக்கங்களுக்கான    சொற்கள்..

‘நரைத்த கண்ணீர்’ எனும் கதையில் வயதான தம்பதியரைப் பார்க்கப் போகும் இளைஞனின்    நிலை பற்றிச் சொல்கிறது.தங்கள் மகன் பற்றிக் கேட்டதற்கு விசாரித்துச் சொல்ல    முற்பட்டும் அந்த தம்பதியர்க்கு அவர்கள் மகன் வீரமரணம் அடைந்தது பற்றிச் சொல்லி    அவர்களை சோகத்தில் ஆழ்த்த விரும்பாது தவிர்த்த போதும் மணைவியின் சந்தோசமே பெரிதென    அந்த பெரியவர் மறைத்தது தெரிய வர அவனுடன் சேர்ந்து எமக்கும் வலிக்கிறது. தப்பிச்    செல்ல இன்றோ நாளையோ என்றிருக்கையில் திடீர் பயணிக்க நேர்கையில் மூட்டை    முடிச்சுகளுடன் பயத்துடன்… தோணிக்காரனுடன் புறப்படுகின்ற அவர்களுடன் நாமும்    பயணிக்கிற அனுபவம் (கிளாலி,கொம்படி,ஊரியான் பாதைப்பயணங்கள்/96ன் பாரிய    இடப்பெயர்வுகள்) தோணிக்காரன் இடை நடுவில் ஒரு மணற் திட்டியொன்றில் இறக்கிவிட்டுச்    சென்றுவிட தவித்த தன் குடும்பத்தை தானே காப்பாற்ற எண்ணி படகுக்காரனுடன்    வருவதாகக்க் சொல்லி கடலுள் குதிக்க மூழ்கிப் போகிறான்.பத்திரிகைச் செய்தியில்    படித்திருந்தாலும் உண்மைக்கதையின் பதிவாகியிருக்கிறது ‘கரைகளிற்கிடையே’ கதையில்..     மக்களுடன் இடம்பெயர்ந்து பின் தன் காணி/மிளகாய்க் கண்டுகளை பார்க்கச் சென்ற    குமார் அண்ணையின் அவலம்/சோகம் ‘குமார் அணாவும் மிளகாய்ச் செடிகளும்’கதை    சொல்கிறது.

இப்படி ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு கதை சொல்லி அசத்துகிறது.  ஏகலைவர்களின்றி    நகர்கின்ற போருக்குள் வாழ்ந்த மக்களிடத்திலிருந்து புறப்பட்ட படைப்பாளர்கள்    சரியான தளத்தை நோக்கிப் பயணிப்பது ‘மரணத்தின் வாசனை’ சொல்லி நிற்கிறது.    ஜனவரியிலும்(2009)மேயிலும் இரண்டு பதிப்புக்களை கண்டுள்ள இந் நூலின் அட்டைப்படம்    மருதுவின் ஓவியத்தால் மிகச் சிறப்பாக இருக்கிறது. த.அகிலனிடமிருந்து நிறைய    ஆவணப்பதிவுகளை படைப்புலகம் வாழ்த்துக்களுடன் எதிர் பார்த்து நிற்கிறது.

mullaiamuthan_03@hotmail.co.uk

நன்றி

பதிவுகள் இணையத்தளம் – முல்லை அமுதன்

மரணத்தின் வாசனை- ஒரு அறிமுகம்
அகிலனின் மரணத்தின் வாசனை கனடாவில்  வெளியிடப்பட்டு, அது என்னுடைய கையுக்குக் கிடைத்து 2 மாதங்களுக்கு  மேலாகிவிட்ட நிலையில் ஒருவாறு வாசித்து முடித்திருக்கிறேன். ‘போர் தின்ற  சனங்களின் கதை’ என்கிற உபதலைப்போடு, வடலி பதிப்பகத்திடமிருந்து வெளியாகியிருக்கிற அகிலனின் பன்னிரண்டு சிறுகதைகள்  அல்லது அனுபவத் தூறல்களின் தொகுப்புத்தான் ‘மரணத்தின் வாசனை’.

ஒரு சின்னப்பையனின் அப்பா செத்துப்போனார்

ஒரு ஊரில் ஓர் கிழவி

மந்திரக்காரன்டி அம்மான்டி

குமார் அண்ணாவும் மிளகாய்க்கண்டுகளும்

ஒருத்தீ

சித்தி

நீ போய்விட்ட பிறகு

சலனங்கள் அற்றவனின் கடைசி நாள்

தோற்ற மயக்கங்களோ

கரைகளிற்கிடையே

செய்தியாக துயரமாக அரசியலாக

நரைத்த கண்ணீர்

மேற்சொன்ன  தலைப்புகளில் படைக்கப்பட்டிருக்கிற படைப்புகள் அத்தனையிலும் ஒரேயொரு  ஒற்றுமை இருக்கிறது. அது ‘மரணத்தின் வாசனை’. முதலில் வருகிற ‘ஒரு  சின்னப்பையனின் அப்பா செத்துப்போனார்’ கதையில் நாசி துளைக்கிற அந்த வாசம்,  அம்மம்மா, சித்தி, நண்பன் தொடக்கம் நேசித்த நாய் எனப் பல தாங்கிகளில்  வந்தாலும் புத்தகத்தை மூடிவைத்த பின்னரும் விலகாமல் இருக்கிறது.

எல்லா  மரணங்களுக்கும் பொதுவான ஒரே விஷயமாக இருப்பது, போர். நீண்ட கொடும் போர்.  மண்ணில் மரங்களைக்கூட வேரூன்றவிடாமல் விரட்டியடிக்கிற போர். சனங்களைத்  தின்கிற போர். அந்தப் போரின் காரணமாக அகிலனும் முண்டியடித்து ஓடுகிறார்.  அந்த ஓட்டத்தில் அவர் சந்திக்கிற சாவுகள்தான் இங்கே கதைகளாக  உருப்பெற்றிருக்கின்றன. பல சமயங்களில் நாங்கள் மறந்துபோய்விட்ட, அல்லது  மறந்துபோய்விட்டதாய் நாங்கள் நம்ப முயன்றுகொண்டிருக்கிற எங்களின்  வாழ்வியல்க் கோலங்களை அகிலன் தொட்டுச்செல்கிறார், கூடவே பக்கச்சார்பு  குறைவான ஒரு சாதாரண ‘தமிழ்ப் பொடியன்’ கண்ட அரசியலையும்தான்.

அகிலனின்  ஒவ்வொரு கதையிலும் ஈழத்தில் ஒரு இருபது வருடம் காலம் கழித்தவன் என்கிற ஒரு  தகுதியில், என்னை இணைத்துப் பார்க்க முடிகிறது. அகிலன் போன்றோர் அனுபவித்த  துயரங்களை நான் அனுபவித்திருக்கவில்லை. ஆனாலும் அவர் சொல்கிற கதைகளின்  பின்னணிகள் என்னுடன் ஒட்டியதாய் இருப்பதாக ஒரு மன ஓட்டம் எழுவதைத்  தவிர்க்கமுடியவில்லை. அகிலன் அனுபவித்த பல இன்பதுன்பங்கள் எனக்கு  நேரடியாகக் கிட்டவில்லை. ஆனால் ஒரு பார்வையாளனாகவாவது பார்க்கின்ற  சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது.

அகிலன் இரண்டுபேரை வைத்தியம்  கிடைக்காத காரணத்தால் இழந்திருக்கிறார். அவரது அப்பா, வைத்தியசாலைக்குக்  கொண்டுபோகமுடியாமல் இறந்திருக்கிறார். (ஒரு சின்னப் பையனின் அப்பா  செத்துப்போகிறார்). இளமையில் அப்பா செத்துப்போனார் என்பதைவிட, ‘அப்பா  வைத்தியம் கிடைக்காமல் செத்துப்போனார்’ என்கிற ஒரு அங்கலாய்ப்பு  அகிலனிடமிருந்து வருகிறது. அவரது சித்திகூட இப்படியாக வைத்தியசாலையில்  மருந்து கிடைக்காமல் செத்துப்போகிறார். அந்த மரணமும் அகிலனின் மனதில்  ‘சித்தி மருந்து கிடைக்காமல் செத்துப்போனா’ என்றுதான் விதைத்துச்  செல்கிறது. எனக்கும் கிளிநொச்சி வைத்தியசாலையில், விசக்கடியில் தப்பிப்  பிழைத்து, காய்ச்சலுக்கு மருந்தில்லாமல், இரண்டு வயதும், ஒரு வயதும்  நிரம்பிய இரண்டு சின்னைப் பையன்களைத் தவிக்கவிட்டு இறந்துபோன ஸ்ரீ அண்ணா  மனதில் வந்து போகிறார்.

கணவன்/காதலனால் கைவிடப்பட்டு அல்லது  ஏமாற்றப்பட்ட இரண்டு பெண்களைப் பற்றியும் அகிலன் சொல்லிப்போகிறார் (ஒரு  ஊரில் ஓர் கிழவி, சித்தி). அந்தப் பெண்களிடம் இயல்பாகத் தொற்றிவிட்ட  பிடிவாதம் போன்றவற்றையும் தொட்டுச்செல்கிறார். அதுவும் யார் வீட்டிலும்  நிலையாகத் தங்காமல், அங்கும் இங்குமாக அலைபாய்ந்து திரிகிற, உறவினர்களால்  ‘அடங்காப்பிடாரி’யாகப் பார்க்கப்படுகிற அவரது  ‘சித்தி’யின் உருவில் நான்  என்னுடைய மாமியைப் பார்க்கிறேன். அம்மனுடன் சகோதரியாக, தாயாக, மகளாக ஏன்  ‘வேசை’ என்று விளிக்குமளவு உரிமையுள்ளவளாகப் பழகும் அவரின் அம்மம்மா (ஒரு  ஊரில் ஓர் கிழவி) எனக்கு எங்களூர்க் கிழவிகள் சிலரைக் கண்முன்  நிறுத்துகிறார். அம்மாவிடம் அடிவாங்காமல் சின்னப் பொடியனைக் காப்பாற்றும்  அக்காக்கள் ஊரெல்லாம் பரவி இருந்திருக்கிறார்கள். தம்பிகளைப் பிள்ளைகளாய்  வளர்க்கும் அந்த உறவுகளைப் பற்றிய எண்ணக் குவியல்களை மீட்டு வருகின்றன  அக்காக்கள் பற்றி பெரும்பாலான கதைகளிலும் அகிலன் காட்டும் பிம்பங்கள்.

அவர்  சொல்கிற ஜாம் பழம், வீரப்பழம் போன்ற பழங்கள் எனக்கு எங்கள் உறவுகள் இருந்த  முரசுமோட்டையை ஞாபகப்படுத்திச் செல்கின்றன. எங்கள் சின்ன மாமா வீட்டில்  ஒரு ஜாம் பழ மரம் இருந்தது. ராஜி அண்ணா ஏறிப் பறித்துத் தருவான்.  மறக்கமுடியாது. அந்த மரத்தின் கீழ் முதன் முதலாக சின்ன மாமாவிடம்  கேட்டுவாங்கிச் சுவைத்த சுருட்டையும். நேமி அண்ணாவின் கையைப்  பிடித்துக்கொண்டு போய் வந்த அந்தக் கோவில் திருவிழா, எனக்கு அருகில் வந்து  அடிப்பதுபோல் பாவனை காட்டிக் காட்டி மேளம் அடித்த அந்த மேளக்காரர், ஒரு  கட்டைக்கு ஒன்றாக இருக்கிற வீடுகள், 2004ல் கிரிக்கெட் விளையாடிய அந்த  விவேகானந்தாப் பள்ளிக்கூட மைதானம், இவ்வளவு தூரம் அடிக்கிறியள் என்று  வியந்த பெறாமக்கள், இரவில் படுத்துறங்கிய அந்தக் கொட்டில்…..  முற்றுமுழுதாக வன்னியில் வாழாவிட்டாலும், அவர்களின் இந்த வாழ்வியல்  எனக்குப் பிடித்திருந்தது. யாழ்ப்பாணத்தில் காணாத ஒரு சுகமான வாழ்வு அங்கே  இருந்தது.

இந்தத் தொகுப்பிலேயே என்னைப் பாதித்த கதை ‘தோற்ற  மயக்கங்களோ’. மேலோட்டமாகப் பார்த்தால் அந்தக் கதையில் மரணம் இல்லையோ என்று  தோன்றும். ஆனால், நுண்ணிய பாதிப்பைத் தரவல்ல இரண்டு ஜீவன்களின் மரணத்தை  அகிலன் அந்தக் கதையில் படம்பிடித்திருந்தார். அவர் செல்லப் பிராணிகளுக்கு  வைத்த பெயர்கள், அதை எங்கிருந்து பெற்றார் என்பதெல்லாம் எங்கள் பால்யகாலச்  சுவாரஸ்யங்கள். நானும் ‘டெவில்’ என்றொரு நாயை பாலில் எறும்பெல்லாம் போட்டு  ஊட்டி வளர்த்தேன். என் ‘டெவிலை’யும் யுத்தம் பிரித்தது, வேறுவிதமாக.

அகிலனின்  எழுத்தில் ஒரு அப்பாவித்தனம் இழையோடிக் கிடக்கிறது. அந்த  அப்பாவித்தனம்தான் அவரது பலமும், பலவீனமும். இப்படி அப்பாவித்தனமான  எழுத்துக்களை ‘மேதாவிகள்’ ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். இதனால் அகிலனின் இந்தப்  படைப்பு ஒதுக்கப்படலாம், இன்றைய மேதாவி இலக்கியச் சூழலில். ஆனாலும், அந்த  அப்பாவித்தனத்தினூடே ஊமைக் குசும்பனாக அவர் பேசும் அரசியல் எனக்குப்  பிடித்திருந்தது. நண்பன் ஒருவனின் மரணம் பற்றிய ‘சலனங்கள் அற்றவனின் கடைசி  நாள்’ என்கிற கதையில் அவரது நண்பன் கேசவன் போர் காரணமாக ஆறு வருடங்களாக  இடுப்புக்குக் கீழ் இயங்காமல் போய் இறந்திருப்பான். அந்தக் கதையில் சில  இடங்களில் அகிலன் நுட்பமாக அரசியல் பேசுகிறார். இடுப்புக்குக் கீழே  உணர்ச்சியற்றிருக்கும் கணவர்களைச் சுமக்கும் அக்காமார்களின் ‘தியாகம்’  என்று கட்டமைக்கப்பட்ட வாழ்வைத் தொட்டுக்காட்டி, பல விஷயங்களை எங்களின்  சிந்தனைக்கு விட்டுச்செல்கிறார்.

ஆறு வருடமாகப் படுக்கையில் கிடந்த  கேசவனின் மரணத்தில், அவனது அவஸ்தையிலிருந்தான விடுதலை பற்றிய தனது  நிம்மதியைப் பதிவு செய்யும் அதேவேளை, ‘இனியும் கேசவன்கள் உருவாகமாட்டார்கள்  என்பதற்கு என்ன நிச்சயம் என்கிற கேள்வி மனசைக் குடைகிறது. துப்பாக்கிகளைத்  துதிப்பவர்களுக்குத் தெரியாதபோது எனக்கெப்பிடித் தெரிந்திருக்கும்?’  என்கிற கேள்வியோடு அவர் அந்தக் கதையை முடித்திருக்கிற விதம், வலிமை  மிகுந்தது. அதே போல் ‘துப்பாக்கிகளில் நல்ல துப்பாக்கி கெட்ட துப்பாக்கி  எனப் பிரிவுகள் இருப்பதாக நம்புகிறார்கள் மொக்குச் சனங்கள்.  துப்பாக்கிக்குத் தெரிந்ததெல்லாம் கொலை. அது மட்டும்தான்’ என அவர் சொல்லிச்  செல்லுகிற அந்தச் செய்தி கவனிக்கப்படவேண்டியது (கரைகளுக்கிடையே).

அகிலனின்  எழுத்துக்களில் குறை இல்லாமலில்லை. தொழில் முறை எழுத்தாளர்களின்  எழுத்துக்களோடு ஒப்பிடும்போது சில கதைகளில் அகிலனின் எழுத்தின் செழுமை  குறைவாகவே இருப்பதாகப்படும் (என்னால் இந்தளவுகூட எழுதமுடியாது என்பது வேறு  விஷயம்). ஆனால் எழுத எழுத அகிலனின் எழுத்து இன்னும் செழுமை பெற்று வீரியமாக  வரும் என்பதில ஐயமில்லை. ஏனென்றால் ‘ஆக்க இலக்கியங்கள்’ உருவாவதற்கு  அத்தியாவசியம் என்று மெலிஞ்சி முத்தன் சொல்லும் ‘சூழலை உற்றுப் பார்க்கிற’  தன்மையும், சுஜாதா சொன்ன ‘காரணங்களும்’ அகிலனுக்கு இருக்கின்றன. களம்  கிடைத்தால் அகிலன் அடித்து ஆடுவார் என்பது திண்ணம்.

பதிப்பகம்

வடலி  பதிப்பகம் மேற்கொண்ட ஒரு நல்ல முயற்சி இது. சமீபகாலமாகத்தான் இவர்கள்  இந்தத் துறைக்குள் காலடிவைத்திருக்கிறார்கள். ஈழத்துப் படைப்பாளிகளுக்குப்  புத்தகம் அடித்துக்கொடுப்பதில் இருக்கிற பொருளாதாரச் சிக்கல்கள் இவர்களை  விழுங்கிவிடாமல் இருக்கவேண்டும் என்பதுதான் இவர்களின் வளர்ச்சிக்கு  மிகப்பெரிய அச்சுறுத்தல். அச்சுக்கோர்ப்பு ரீதியாக முன்னேறுகிறார்கள். கானா  பிரபாவின் ‘கம்போடியா’ சிறப்பான அச்சுக்கோப்பு அல்ல. ‘மரணத்தின் வாசனை’  கூட அவ்வளவு சிறந்த ஒன்றாகச் சொல்லமுடியாவிட்டாலும், ‘கம்போடியாவை’ விட  நன்றாக வந்திருந்தது. சமீபத்தில் வெளியான கே.எஸ்.பாலச்சந்திரனின் ‘கரையைத்  தேடும் கட்டுமரங்கள்’ அற்புதமாக வந்திருக்கிறது.

வடலி  சரியான திசையில் போகிறது, என்ன எம்மவரிடம் இருந்து ஆதரவேதும் பெரியளவில்  இல்லை என்கிற குறைதான் இவர்கள் நிலைத்து நிற்பதில் பெரும் சிக்கல்களை  உருவாக்கியிருக்கிறது.

சின்னச் சர்ச்சை

ட்விட்டரில்  இந்தப் பதிப்பைத் திறந்தவுடனே ஒரு குறை கண்டதாகச் சொல்லியிருந்தேன்.  சாயினி கூடக் குறை காண்பது பற்றி ஒரு மறைமுகக் குத்துக் குத்தியிருந்தார்.  தொப்பி அளவாயிருந்ததால் போட்டுக்கொண்டேன்  . அந்தக் குறை இதுதான். ‘சொல்  விளக்கக் குறிப்புகள்’ எதற்காக? வணிக ரீதியான சில நோக்கங்களுக்காகத்தானே.  அதாவது இந்தப் படைப்பு இயலுமானளவு பெரியதொரு வீச்சத்தைக்  கொண்டிருக்கவேண்டும் என்கிற நோக்கத்தால்தானே? இதுவும் ஒரு வகையிலான  பெரியண்ணன்களைக் குசிப்படுத்தும் நோக்கம் இல்லையா? (தொப்பி அளவானவர்கள்  போட்டுக்கொள்ளலாம்)

நன்றி

இன்னாத கூறல் வலைப்பூ – கிருத்திகன்