withside

அபராதி

Rated 5.00 out of 5 based on 6 customer ratings
(6 customer reviews)

பஹீமா ஜஹான்,கவிதைகள்,  விலை:50

இயற்கை தழுவிய கற்பனைகளாலும் அதிகாரத்தை விரும்பாத அன்பினாலும் நிறையும் பெண் உணர்வுகளே பஹீமாவின் கவிதைகளது இயல்பாய் இருக்கிறது. போர்வெறி கொண்ட ராஜாக்களது அதிகார அரசியலுக்கு எதிராய் அல்லது மாற்றாய் அன்பை, நிம்மதியை, மாபெருங் கருணையை தன்னோடு எடுத்துச் செல்லவிரும்புகின்றன அவரது கவிதைகள்.

6 reviews for அபராதி

  1. Rated 5 out of 5

    vadaly

    “அபராதி” என்ற கவிதை பேசும் நுண்ணரசியல் வலிமையானதாக இருக்கிறது. அதிகாரத்தைச் சாடும் கவிஞர் நீ செய்தவற்றுக்கான அபராதத்தை நீ கட்டும் வேளை வரும், அதை உன்னைப் பழிவாங்கக் காத்திருக்கும் கண்களின் தீவிரம் உனக்கு உணர்த்தும் என்பதாக உருவகிக்கிறார். “அபராதி” என்னும் தலைப்பு தொகுப்புக்கு எங்கணம் பொருந்துகிறது எனக் கேட்டால், ஏலவே குறிப்பிட்டபடி கவிகளுக்குள் ஊடாடித் திரியும் பெண்ணால் எழுப்பப்படும் கேள்விகள் நினைவின் பதிவுகள் வஞ்சிக்கப்பட்டவளுக்கான அல்லது காயப்படுத்தப்பட்டவளுக்கான குரலில் ஒலிக்கின்றன. ஆக கவிதைகளின் தொனியும் செலுத்தப்படவேண்டிய அபராதத்தின் மையத்தை நோக்கி எறியப்படும் கயிறின் வழியே தம் சுவடுகளைப் பதியவிட்டுக் காத்திருக்கின்றன என்றும் கொள்ளலாம்.
    http://mayoomano.blogspot.com/2011/10/blog-post.html

  2. Rated 5 out of 5

    vadaly

    பறவைக்கு பயணப்பாதையென்று ஒன்று இல்லை. அதற்கு வானமே எல்லை. பெண்களுக்கும் அப்படித்தான். எதிர்காலத்தில் அவர்களது பாதைகள் எங்கெங்கு விதிக்கப்பட்டிருக்கின்றன என்பதை யாராலும் எதிர்வுகூற முடியாது. சிறுவயதில் தனது வீட்டோடும், குடும்பத்தாரோடும் மகிழ்வோடு கழிக்கும் காலங்களெல்லாம், பெண்களால் பிறிதொரு இட்த்துக்கு பிரிந்துசெல்லப் போகிறோம் என்ற மெல்லிய திரையால் மூடப்பட்டே கொண்டாடப்படுகின்றன. அவ்வாறாக தான் கடந்துவந்த காலங்களை, கவிதைகளாக மீட்டிப் பார்த்திருக்கிறார் கவிஞர் ஃபஹீமா ஜஹான். அவரது மொழியாளுமையும், சொற்செழுமையும் அவரது நினைவுகளையும் உணர்வுகளையும் வாசிப்பவர்களும் தெளிவாக உணரும்படி கையாளப்பட்டிருக்கின்றன. ‘அபராதி’ எனும் தொகுப்பு, நிச்சயமாக குற்றமிழைத்தவர்களைச் சுடும். சுடட்டும் !
    – எம். ரிஷான் ஷெரீப்,
    இலங்கை.
    http://mrishans.blogspot.com/2010/02/blog-post.html

  3. Rated 5 out of 5

    vadaly

    ‘அபராதி’ எனும் தொகுப்புத் தலைப்பிற்குரிய கவிதை, ஈழத்தின் தற்போதைய நிதர்சன நிலையை அப்பட்டமாக எடுத்தியம்பியிருப்பதால் மனதில் இனம்புரியாதவொரு சஞ்சலத்தை விதைத்துவிடுகிறது. தொகுப்பிலுள்ள மற்ற எல்லாக் கவிதைகளும் பல விதமான உணர்வுகளை, ஞாபகப்படிமங்களை உதிக்கவும் மீளவும் செய்துவிடுவதோடு நீங்காவண்ணம் மனதில் பதிந்தும் விடுகின்றன. எனவே இத் தொகுப்பும் வாசகரிடையே பரவலான வரவேற்பைப் பெறும் என்பதில் மாற்றுக் கருத்து ஏதும் இல்லை.
    https://groups.google.com/forum/#!topic/panbudan/Hvq45KhJ8cY

  4. Rated 5 out of 5

    vadaly

    விழிப்படைந்த பெண்மையின் குரலாகவும், அதி காரத்துக்கும் அடக்குமுறைகளுக்கும் எதிரான குரலாக வும், அன்பு, பாசம், சமத்துவமான காதல் என்பவற்றின் குரலாகவும், இயற்கையின் குரலாகவும் அமையும் ஃபஹீமாவின் கவிதைகள் எளிமையானவை, நேரடியா னவை, அதிக அலங்காரங்கள் அற்றவை. அதேவேளை, படிமச் செறிவு மிக்கவை. இவை இவரது கவிதைகளின் பலம் என்று சொல்வேன். இளம் தலைமுறையைச் சேர்ந்த முக்கியமான ஈழத்துக் கவிஞர்களுள் ஒருவராக ஃபஹீமாவின் கவிதைகள் அவரை அடையாளப் படுத்துகின்றன.
    -– எம். ஏ. நுஃமான்
    https://eathuvarai.wordpress.com/2010/03/07/%E0%AE%83%E0%AE%AA%E0%AE%B9%E0%AF%80%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%9C%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%AE/

  5. Rated 5 out of 5

    vadaly

    ஃபஹீமா இஸ்லாமிய பெண்ணியலாளராக தன் பெண்சார்ந்த உணர்வை முன்வைக்காமல் பால் வேறுபாட்டுத் தளத்தில் மட்டுமே இயங்கு கிறார். பெண் அடக்கப்படும் பல்வேறு சட்டகங்களை விமர்சிக்கிறார். போர்நிகழும் சூழலில் பெண்ணியம் மலர்வது அரிது. உயிரைத் தற்காத்துக்கொள்ள வேண்டிய நிர்பந்தமும் ஏற்கப்பட்ட ஆயுதங்களுமே இவர்களை வழி நடத்தும். போரச்சம் இல்லாத சூழலில் வாழ்ந்து வருகிற ஃபஹிமாவின் கவிதைகளில் நிலத்தை பிறர் ஆக்கிரமிக்கும் பொழுது சுயம் அழிக்கப்பட்ட இனத்தினராக இயல்பான நடைமுறைக்கு ஊறுநேர்வதாக சுதந்திரம் கட்டுப்படுத்தப் படுவதான அவலம் பதிவாகிறது. செழித்தநிலம், திரிந்த நிலம், கருணைமிக்க நிலம், வாழ்வா தாரத்தின் துணையாக இருக்கின்ற நிலம் இந்த நிலத்தை வளப்பமாக்கிய பெண்ணின் வாழ்க்கையைப் பேசுகிறது.
    http://keetru.com/index.php?option=com_content&view=article&id=11630&Itemid=139&__cf_chl_jschl_tk__=00448815a1f964ed2ae3aa5b703190e04f720ee4-1582780823-0-ASCfIM8V3ht3SOGVSlUhJHE3R92WBzQoO2rqzYlTtzrR8CVwjC3FzqEVSszv6C0LBF43IVG04OwD520sll-J5rbyUS4gEr4ne1LDbegap7xMIGPnUeqH55M7Ycl9fSU5H5yWIw6cGh51GEEwkwOO6CTyQtyfP2DLE1NlA-arKWJNpD3EYUd0lJ2W7xg0Ot9WLhbhtj-ue3c3vwJq_3zYZN2Ect_9eedUM1TTPErBBckR1qh2TFOlrktmr2iHtT2sWnfi8seWzEbdjiTe_RN0jyzNQTHLwyPlBE4HzAdqG3erswKRum9oLRHb2HaMg5xPscc-wfI1Yo8WZxsEcAeuTpP219nKuoZVzv7FbW1jsOie

  6. Rated 5 out of 5

    vadaly

    ஃபஹிமா பேசும் முக்கியமான இடம் நிலம். காலங்காலமாக மனிதனின் வாழ்க்கையில் முக்கிய வினையாற்றுவது நிலம். ஐம்பூதங்களுள் ஒன்றான நிலம் இருப்பின் ஆதாரம். ஆதிமனிதன் தொடங்கி இக்கால நவீனமனிதன் வரை அனைவருடைய வாழ்விலும் இன்றியமையாத கூறு நிலம். நிலத்தில் மனிதன் நிலை பெறுதலி லேயே நாகரிகம் வளர்ச்சி பெற்றது. நிலம் மிகப்பெரும் சக்தியாக உருவெடுக் கிறது. வாழ் வதற்கு நிலமற்றவனுக்கும் பெரு நிலத்தைக் கொண்டிருப்போருக்குமான வேறுபாட்டைக் கூர்ந்து கவனித்தால் விளங்கிக் கொள்ளலாம். ஆதிக்கம் அரசு உருவாக்கிய சட்டகங்கள் அனைத்தும் நிலத்தை கையகப்படுத்தவும் பாது காக்கவும் பயன்பெறவுமாக உண்டாக்கப் பட்ட வையே! நிலமில்லாதவனை துச்சமென மதிக்கும் போக்கு எல்லாக் காலத்திலும் உள்ளது போலவே நிலத்திற்காகப் போராடுவதும் தொடர்ந்து வருகிறது. ஓரிடத்தில் நிலையாகத் தங்கி வாழ்வதன் பொருட்டாக அந்நிலத்தில் வாழும் இன மக்கள் வெவ்வேறு காலங்களில் போராட்டங்களை முன்னெடுத்திருக்கின்றனர் என்பதைக் காண் கிறோம்.
    https://peruvelippen.wordpress.com/2011/06/24/%e0%ae%a8%e0%af%80%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d/

Add a review