enathu-magal

எனது மகள் கேள்வி கேட்பவள்

எனது மகள் கேள்வி கேட்பவள்

கற்பகம் யசோதர

அரசாங்கங்கள் தமது ஒற்றைத் தன்மையுடைய வழிமுறைகளை தமக்கான அதிகாரங்களை தக்கமைத்த  நாட்டில், தான் வாழ்ந்த – எதிர்கொள்கின்ற பல்வேறு அரசியல் சிக்கல்களை அதிகார சமமின்மைகளை வன்முறைகளை சனநாயக மீறல்களை அதிகாரத்திற்கு எதிராக நின்று பேசுகின்ற கவிதைகள் கற்பகம் யசோதரவினுடையவை. ஒடுக்கப்படும் சிறுபான்மையினரின் அரசியலை – எதிர்கொண்ட கீழைத்தேய வன்முறைகளை மேலைத்தேய அரசின் வன்முறையுடன் ஒப்பிடுவதூடாக – சிறுபான்மையினராய் எங்கும் இணைந்துவிடாத அசமத்துவத்தின் பயங்களையும் அதன் அரசியலையும் இவை பேசுகின்றன.

எனது மகள் கேள்வி கேட்பவள்’ வளர்ந்து கட்டமைக்கப்பட்ட கருத்தியல்களுடன் முரண்படப் போகின்ற மகள்களை எதிர்வுகூறுவது. சமத்துவமற்ற இந்த வாழ்வில் –  முரண், இயல்பு. ஆதலால் முரண்படவும் தங்கிப் போதலன்றி ஒப்புவித்தலன்றி அநீதிக்கெதிராய் கேள்வி கேட்கவும் ஒன்றிணையவும் வேண்டிநிற்கின்றன இக் கவிதைகள்

Reviews

There are no reviews yet.

Be the first to review “எனது மகள் கேள்வி கேட்பவள்”