finalnewksb

கரையைத்தேடும் கட்டுமரங்கள்

Rated 5.00 out of 5 based on 6 customer ratings
(6 customer reviews)

நாவல்,கே.எஸ்.பாலச்சந்திரன்,விலை:200

 

ஈழத்து நாவல் இலக்கிய வரலாற்றில் ஒரு காலச் சுவடாய் நிலைக்கக்கூடிய படைப்பு இது. புலம் பெயர்ந்த பின்னரும் தாயகத்தின் நினைவுகளைச் சுமந்து வாழும் ஒரு படைப்பாளியின் நினைவுச் சித்திரம். வானொலி, தொலைக்காட்சி, மேடை, திரைப் படக்கலைஞர், நேர்முக வர்ணனையாளர், திரைப்பட இயக்குனர், தொலைக்காட்சி நிகழ்ச்சித் தயாரிப்பாளர் எனப் பன்முகம் கொண்ட திரு.கே.எஸ்.பாலச்சந்திரன், மிகச் சிறந்த வானொலி மற்றும் மேடை நாடகங்களையும் படைத்த எழுத்தாளர். தன் எழுத்தால் வரிகளால் வாசகன் உள்ளத்தில் காட்சிகளை விரியச்செய்து அந்த சூழலுக்கே அழைத்துச் செல்லக் கூடிய ஆற்றல் கொண்டவனே ஒரு சிறந்த எழுத்தாளனாக முடியும். இவரது எழுத்துக்களுக்கு அவ்வாற்றல் உண்டு.

6 reviews for கரையைத்தேடும் கட்டுமரங்கள்

  1. Rated 5 out of 5

    vadaly

    கரையைத் தேடும் கட்டுமரங்கள் நாவல் படைத்த, கே.எஸ்.பாலச்சந்திரன் அவர்களது பெயரும் வரலாற்றில் தடம் பதிக்க வாழ்த்துகிறேன்.

    —-B.H அப்துல் ஹமீத்

  2. Rated 5 out of 5

    vadaly

    …தற்சமயம் சமீபத்தில் வெளிவந்த கே.எஸ்.பாலச்சந்திரனின் கரையைத்தேடும் கட்டுமரங்கள் என்ற நாவலை வாசித்துக் கொண்டிருக்கிறேன். வெறும் மீனவரின் வாழ்க்கையோடு சம்பந்தப்பட்ட நாவல் என்று ஒதுக்கிவிடாமல் இவையெல்லாம் ஈழத்தமிழரின் இருப்பைப் பதிவு செய்யும் ஆவணமாக இருப்பதால் நான் முக்கியமாக அவற்றுக்கு மதிப்புக் கொடுத்து வாசிக்கின்றேன். – குரு அரவிந்தன்
    http://www.tamilauthors.com/10/19.html

  3. Rated 5 out of 5

    vadaly

    http://ksbcreations.blogspot.com/2009/10/blog-post.html
    “கரையைத்தேடும் கட்டுமரங்கள்” வெளியீட்டுவிழாப்படங்கள்

  4. Rated 5 out of 5

    vadaly

    ஈழத்து மூத்த கலைஞர்களில் ஒருவரான கே. எஸ். பாலச்சந்திரன் அவர்கள் அருமையான ஒரு படைப்பைத் தமிழ் இலக்கிய உலகிற்குத் தந்திருக்கிறார். ஈழத்து வடபகுதியில் உள்ள, கடலும் கடல் சார்ந்த நெய்தல் நிலத்து மக்களையும், அவர்களின் வாழ்க்கை நெறிகளைப் பற்றியதுமான இந்த நாவல் ஒவ்வொரு இலக்கிய ஆர்வலர்களும் வாசிக்க வேண்டிய நூலாகும். நெய்தல் நிலச் சூழலில் எழுதப்பட்ட நாவல்கள் தமிழில் மிகக் குறைவாகவே இருக்கின்றன என்றே சொல்லலாம். சின்ன வயதிலே தமிழில் வாசித்த தகழி சிவசங்கரபிள்ளையின் செம்மீன், அதன்பின் ஆங்கிலத்தில் வாசித்த ஏணஸ்ட் ஹோமிங்வேயின் (Ernest Hemingway) ஓல்ட் மான் அன் த சீ (The Old Man and the Sea) போன்ற நாவல்களில் வரும் அனேகமான பாத்திரங்கள் இன்றும் மனதைவிட்டகலாது நிற்கின்றன. தமிழில் இவ்வாறான சூழ்ல் சார்ந்த சில படைப்புக்கள் வெளிவந்தாலும், இலக்கிய ஆர்வலர்களால் அவை பற்றி அதிகம் பேசப்படவில்லை. ஈழத்திரைப்படமான வாடைக்காற்று என்ற படத்தின் மூலம் ஏற்பட்ட அனுபவங்களையும், மீனவநண்பன் என்ற நிகழ்ச்சிக்காக் கிடைத்த தேடல்களையும் ஆசிரியர் தனது நினைவில் கொண்டுவந்து இந்த நாவலில் பயன்படுத்தியிருக்கிறார்.
    http://tamilaram.blogspot.com/2010/10/ksbalachandrans.html

  5. Rated 5 out of 5

    vadaly

    வடலி வெளியீட்டகத்தாரின் வெளியீடாக வெளிவரும் இந்த நூலுக்கு கே.எஸ்.பாலச்சந்திரன் அவர்கள் ”கரையத்தேடும் கட்டுமரங்கள் ”என்று பெயரிட்டிருக்கிறார், முற்றிலும் ஈழத்து நினைவுகளைச் சுமந்து வரும் இந்த நாவலி்ல் முக்கியமாக கடலோடிகளின் கதை சொல்லும் கதையாக வருகிறது, நாவலில் அங்கங்கு தன் அனுபவங்களை நாவலுக்குரிய பாங்கிலே தனக்குரிய பாணியில் எடுத்து செல்லும் அழகு மிகச்சிறப்பு,

    https://ourjaffna.com/cultural-heroes/%E0%AE%88%E0%AE%B4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87-%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D

  6. Rated 5 out of 5

    vadaly

    ஆண்டுதோறும் பாகுபாடின்றி, தரமான இலக்கியப் படைப்புகளை தேர்ந்தெடுத்து, அவற்றின் படைப்பாளிகளுக்கு ‘‘அமுதன் அடிகள் வெள்ளிவிழா அறக்கட்டளை இலக்கியப்பரிசு” வழங்கிவரும் அமுதன் அடிகள் அறக்கட்டளை, முதன்முதலாக ஒரு இலங்கைப்படைப்பாளியின் நூலுக்கு இந்த விருதை வழங்கியுள்ளது. கலைஞர் கே.எஸ்.பாலச்சந்திரன் எழுதிய ‘கரையைத் தேடும் கட்டுமரங்கள்” என்ற நாவலுக்கு 2009ம் ஆண்டுக்கான அமுதன் அடிகள் இலக்கியவிருது கிடைத்திருக்கிறது.
    இந்த விருதை இதுவரை புகழ்பெற்ற எழுத்தாளர்கள் பலர் பெற்றிருக்கிறார்கள். இந்திய சாகித்ய விருது பெற்ற பல எழுத்தாளர்கள் அடங்கிய இந்த வரிசையில் http://kavinger-asmin.blogspot.com/2011/03/blog-post_29.html

Add a review