வடலி இந்தியாவில் பதிவு செய்யப் பட்ட ஒரு வெளியீட்டு நிறுவனமாகும். புத்தகங்கள் ஒலிப்புத்தகங்கள் ஆவணங்கள் குறும்படங்கள் என அதன் நோக்கு விரிகிறது. தமிழில் படைப்பார்வம் வெளியீட்டார்வம் மிக்க சில இளைய நண்பர்களின் கூட்டு முயற்சியில் வடலி தனது முதற் காலடியை எடுத்து வைக்கிறது. தமிழகத்தில் தளம் கொண்டியங்கும் வடலி வருடந்தோறும் பத்திற்கும் குறையாத தமிழ் நூல்களை வெளியிட்டு விநியோகிக்க திட்டமிட்டிருக்கிறது.

1. தமிழில் எழுத்தார்வமும் துடிப்பும் மிக்க அற்புதமான படைப்பாளிகளுக்கு அவர்களது புத்தகங்களை வெளியிடுவதில் பொருளாதாரம் ஒரு பெரும் தடையாக இருந்து வந்த நிலையை வடலி மிக நிச்சயமாக அழித்தொழிக்கும்.
2. ஒரு சில ஈழத்துப் படைப்பாளிகளோடு தமிழகத்தில் தேங்கி விட்ட அறிமுகத்தினை பரவலாக்கவும் விரிவாக்கவும் சாத்தியமான சகல வழிகளிலும் வடலி ஏற்பாடு செய்யும்.
3. தமிழகத்தின் பெருநகர சிறுநகர மற்றும் முன்னணி புத்தக நிலையங்களில் வடலியின் நூல்களை விநியோகிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதோடு நூலகங்களுக்கான கோரலும் பெறப்பட்டுள்ளது.
4. ஐரோப்பாவில் பிரான்ஸ் மற்றும் கனடா நாடுகளில் தமிழ் புத்தக நிலையங்களில் வடலி நூல்களை வாசகர்கள் பெறுவதற்கான வழி வகைகள் செய்யப் பட்டுள்ளன.
5. உலகெங்குமிருந்து வடலியின் புத்தகங்களை தபாலில் பெறுவதற்காக வடலி வாணிபம் பகுதி ஆரம்பிக்கப் பட்டுள்ளது. இதன் மூலம் இணையம் வழியாகவும் வாசகர்கள் புத்தகத்தினைப் பெற முடியும்.
6. இறுதியாக - தமிழில் புத்தக வெளியீடென்பது எழுத்தாளரின் மனத் திருப்திக்கான ஆறுதல் என்றிருந்த நிலையினை விடுத்து அவர் பொருளாதார ரீதியாகவும் வெற்றி பெற முடியும் என்ற ஆர்வத்தோடு உலகெங்கும் பரந்து வாழும் தமிழ் இலக்கிய தீவிர வாசகர்கள் மீதான நம்பிக்கையில் களம் இறங்குகிறோம்.

வடலியின் நூல்கள் சந்தேகமேயில்லாமல்…. உங்களுடையவை.. உங்களுடையவை மட்டுமே..

தொடர்புகளுக்கு,
Vadaly Veliyeedu
No. 54/13, 10th,cross Street
Trust Puram
kodampakkam
Chennai 600 024
Tamil nadu
India.
www.vadaly.com
www.vadaly.com/shop

Phone : 0091-44-43540358

publishing, distributing and Online Marketing

India
T.Agiilan
Phone : 0091-9840895836
Email : t.agiilan@gmail.com