சாகசக்காரி பற்றியவை | by Thanya
Poems/Tamil
Thanya exposes her desire for equality and interdependence in all aspects of relationships, be it friendship or love. By writing about relationships, she explores the structure of the society that is not made for women who seek adventure, freedom, or self-respect.
vadaly –
–> மனிதநேயப் பண்புகளும் முற்போக்கான சிந்தனைகளும் அவற்றுக்கான செயற்பாடுகளும் மிகுந்த கவிஞர் தான்யா புலம் பெயர்ந்து கடந்த இருபது ஆண்டுகளாக கனடாவில் வாழ்ந்து வருபவர். தான்யாவின் புதிய கவிதைத் தொகுப்பு ‘சாகசக்காரி பற்றியவை’. 2009ல் வெளி வந்த ‘ஒலிக்காத இளவேனில்’ என்ற பெண்கள் கவிதைத் தொகுப்பின் தொகுப்பாசிரியர்களில் ஒருவர் இவர்.
–> புத்தாயிரத்திலிருந்து எழுதி வரும் கவிஞர் தான்யா தனது கவிதைகளில் மனிதர்களுக்குச் சில வேளைகளில் தோன்றக்கூடிய சூழலோடும், சூழ்நிலைகளோடும் ஒன்றிப் போகாத, ‘‘கூட்டத்தோடு இருக்கும் போது தனிமையில் இருப்பதாகவும், தனிமையில் இருக்கும் போது கூட்டத்தோடு இருப்பதாகவும்’’ எண்ணக் கூடிய மனப் பிறழ்வு நிலையை பல்வேறு இடங்களில் பதிவு செய்கிறார். உலகில் சரிபாதியாக இருக்கின்ற, பேராற்றல் கொண்ட பெண்களை குடும்ப அமைப்பும் சமூக அமைப்பும் எப்படி போர்க்குணம் அற்றவர்களாக மாற்றுகிறது, தன்னலம், குடும்பநலம் என்கிற குறுகிய வட்ட்த்துக்குள் சுற்ற வைக்கிறது. அத்தகைய சூழ்நிலைகளிலிருந்து வெளியே வர எத்தனிக்கும் போராடிக் கொண்டிருக்கும் ‘சாகசக்காரி(கள்) பற்றியவை’ இக்கவிதைகள். நன்னல வாழ்வை நோக்கிய முன்னகர்த்தலாக, வாசிப்பில் பெரிதுவக்கும் இந்நூலை ‘வடலி வெளியீடு’ பதிப்பித்துள்ளது.
https://kungumamthozhi.wordpress.com/tag/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B5%E0%AF%88/