கட்டுரைகள்
தொகுப்பாசிரியர்: ரகுமான் ஜான்
விலை: ரூ575
மார்க்சியமானது வரலாற்றை, சமுதாயத்தை எவ்வாறு புரிந்து கொள்வது? சமுதாயத்தை எவ்வாறு மாற்றியமைப்பது? என்பது பற்றிய ஒரு முறையியலை அளிக்கிறது. இந்த முறையியல்தான்
மார்க்சியத்தின் தீர்க்கமான அம்சமாகிறது. இந்த முறையியலை சமூகத்தின் பல்வேறு பிரச்சனைகளில் பிரயோகித்துப் பல கோட்பாடுகளை மார்க்சியம் உருவாக்கியுள்ளது. இந்த வகையில் மார்க்சியம் என்பது மார்க்சிய முறையியலையும, மார்க்சிய கோட்பாடுகளையும் உள்ளடக்கியது என்பது சரியானதே. எனினும் மார்க்சியமானது மிகவும் முன்னேறிய கோட்பாடாகத் திகழ வேண்டுமாயின் அதன் முறையியல் அதிக கவனத்தை வேண்டி நிற்கிறது. மார்க்சியத்தின் இந்த முறையியல் தொடர்ந்தும் முனைப்பாக முன்னெடுக்கப்படும்போதுதான் மார்க்சியமானது புதிதாக உருவாகும் பிரச்சனைகளையும், மிகவும் வேறுபட்ட ஸ்தூலமான நிலைமைகளையும் முகங்கொடுக்கும் அதன் உயிர்ப்பாற்றலைக் கொண்டிருக்கும்.
Reviews
There are no reviews yet.