en peyar vit

என் பெயர் விக்டோரியா

என் பெயர் விக்டோரியா

தொந்தா விக்டோரியா

தமிழில்:தேவா

அர்ஜென்டீனாவில் 1976-இல் நிகழ்ந்த ஆட்சிக்கவிழ்ப்பு அதன் வரலாற்றிலேயே கர்ணகொடூரமானதான சர்வாதிகார ஆட்சிக்கு வழிவகுத்தது. முப்பதாயிரம் வரையான மக்கள் கடத்தப்பட்டார்கள். சித்திரவதைக்குள்ளானார்கள். ஈற்றில் ‘காணாமல் போனார்கள்.’ அக் காலத்தில்தான் கர்ப்பிணிகளாயிருந்த அரசியல் கைதிகளுக்குப் பிறந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் இருண்மைக்குள் சபிக்கப்பட்டிருந்த அவர் தாய்மாரிடமிருந்து திருடப்பட்டு இராணுவத்துடன் தொடர்புடையவர்களிடமோ அந்த சர்வாதிகார ஆட்சிக்கு துணைசெய்தவர்களிடமோ ஒப்படைக்கப்பட்டார்கள். அவ்வாறு கொடுக்கப்பட்ட குழந்தைகளில் ஒருவள்தான் அனாலியா. தான் தத்தெடுக்கப்பட்டவள் என்பதையே சந்தேகிக்காது வளர்ந்த அவள், தனது 27வது வயதில் தான் தனது பெற்றோர் தனதல்லர் என்றும் தனது பெயரே தன்னுடையது அல்லவென்றும் அறிகிறாள்.
‘எனது பெயர் விக்ரோரியா’ எனும் இந் நூலில் தனது கதையை அனாலியா அல்ல விக்ரோரியாவே எழுதிச் செல்கிறாள். அதன் பக்கங்கள் ஊடே ப்யூனஸ் அயர்ஸின் புறநகர் பகுதிகளில் ஒரு செழிப்புமிக்க மத்தியதரவர்க்கத்தில் வளர்ந்தவளான தீவிர அரசியல் பிடிப்புகளை உடைய ஓர் இளம் பெண்ணை நாம் அறிகிறோம். தன் உற்றவராய் எண்ணியிருந்தவர்களே தனது பெற்றோரின் கொலைக்கும் பின்னர் தான் கடத்தப்பட்டு தத்தெடுக்கப்பட்டதற்கும் காரணகர்த்தாக்களும் என்பதை அறிவதிலிருந்தே தனதடையாளங்கள் குறித்த உண்மையைத் தேடிய அவளது பயணமும் தொடங்கியது. இன்று விக்ரோரியா அர்ஜென்டீன பாராளுமன்றத்தில் மிக இளம் வயது உறுப்பினர். தனது அடையாளத்தையும் சொந்த பெயரினையும் மீட்டுக்கொண்டு விட்டவர். இன்று அவர் அனாலியா அல்ல, விக்ரோரியா டொண்டா!
ஸ்பானியமொழியில் எழுதப்பட்ட இந்தப்புத்தகம் DR.Stefanie karg இனால் ஜேர்மன் மொழியில் மொழிபெயர்க்கப்பட்டு அதன் வழியாகத் தேவாவினால் தமிழுக்கு கொண்டு வரப்படுகிறது.

Reviews

There are no reviews yet.

Be the first to review “என் பெயர் விக்டோரியா”