ஈழ விடுதலைப் போர் இறுதியில் பெரும் மக்கள் படுகொலையில் போய் முடிந்தபிறகு -அதன் காரண காரியங்கள், அரசியல், ராணுவப் பிழைகள், புலிகளின் செயல்பாடுகள் என எல்லாவற்றையும் ஆழமான உரையாடல் மூலம் நம் முன் நிறுத்துகிறார்கள். தியாகு-ஷோபா சக்தி இருவரின் பேச்சும் உரையாடல்கள் ஊடாக உண்மைகளை முன்வைக்கிறது. ஈழத்தில் புதிய அரசியலைக் கண்டெடுக்க வேண்டிய அவசியம் புரிபடுகிற உரையாடல் தொகுப்பு!
கொலை நிலம் முரண் அரசியல் உரையாடல்
தியாகு – ஷோபாசக்தி, விலை: 80
1 review for கொலை நிலம் முரண் அரசியல் உரையாடல்
You must be logged in to post a review.
vadaly –
‘ கொலைநிலம்- முரண் அரசியல் உரையாடல்’ என்ற என்ற தலைப்பில் வடலி பதிப்பகத்தின் வெளியீடாக இந்தப் புத்தகக் காட்சிக்கு வந்திருக்கும் இந்த நூலானது, ஷோபா சக்தி, தியாகு இருவரையும் சந்திக்க வைத்திருக்கிறது. புலி விமர்சன கருத்துக்களின் ‘ஐகான்’ ஆக பார்க்கப்படும் ஷோபா, புலிகள் செல்வாக்கின் உச்சத்தில் இருந்த காலம் தொடங்கி தனது விமர்சனங்களை வைத்துக் கொண்டிருக்கிறார். அதுபோலவே, ஈழப்போரின் இக்கட்டான காலம் முதல் முள்ளிவாய்க்கால் வரைக்கும் ஈழப் போராட்டத்தின் தீவிர ஆதரவாளராக இயங்குபவர் தியாகு. எந்த சந்தர்ப்பத்திலும் அதிகாரங்களுடன் சமரசம் செய்துகொள்ளாதவர்கள் என்ற அடிப்படையில் இந்த இரு சக்திகளும் தமிழர் நலனில் அக்கறை கொண்டவர்கள் என்பதில் சந்தேகம் இல்லை. இருவரும் இந்த ‘கொலை நிலம்’ நூலில் ஈழம் குறித்த ஓர் அரசியல் உரையாடலை நிகழ்த்தியிருக்கிறார்கள். முரண் அரசியல்கள் ஒரே அறையில் அமர்ந்து பேசுவது என்ற நல்ல கலாச்சாரத்தை தொடங்கி வைக்கிறது என்ற அடிப்படையிலும், இப்படியான முரண்களின் உரையாடல்களின் மூலம் மட்டுமே ஈழத் தமிழர்களின் எதிர்கால அரசியலை கண்டெடுக்க முடியும் என்பதாலும் இந்த நூல் முக்கியத்துவம் வாய்ந்ததாகிறது.
http://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-20-13/1794-2010-01-01-02-10-05