யுத்தத்தில் ஒரு காலைப் பறிகொடுத்தவர் இந்நூலாசிரியர் யோ.கர்ணன். யுத்தம் அவரையொத்தவர்களது இளமைப் பருவத்தைத் தின்றுவிட்டது. கல்வியை, தொழில் வாய்ப்புகளை, அவர்களுக்கானஎதிர்காலத்தை என எல்லாவற்றையும் அது தின்று தீர்த்துள்ளது. இப்பொழுது முன்னே நிற்பது சவாலான எதிர்காலம் மட்டுமே. அவருடைய கடந்த காலத்தின் நினைவுப் பரப்பு விசை கூரிய ஒரு காந்தத்தைப் போல அவரைக் கவர்ந்து இழுத்துக்கொண்டே இருக்கிறது. விடுதலைக்கான போராட்டம் என்று ஆரம்பித்த செயற்பாடுகள், முடிவற்ற ஒரு யுத்தமாகி பல்லாயிரக்கணக்கான மனிதர்களின் வாழ்க்கையை நாசமாக்கிவிட்டது. இப்பொழுது தமிழ் பேசும் இனங்கள் இலங்கையில் மிகவும் மோசமான நிலைமையிலேயே இருக்கின்றன. கர்ணன் இந்த நிலைமைகள் தொடர்பாக தன் அனுபவங்களை எழுதுகிறார் ஒரு சாட்சியாக, ஒரு பதிவாளனாக, ஒரு கதைசொல்லியாக.
தேவதைகளின் தீட்டுத்துணி
யோ.கர்ணன்,சிறுகதைகள்,விலை – 60
Categories: சிறுகதைகள், புத்தகப் பட்டியல்
Tags: ஈழ எழுத்தாளர், ஈழம், சிறுகதைகள், யோ.கர்ணன், வடலி வெளியீடு
Be the first to review “தேவதைகளின் தீட்டுத்துணி” Cancel reply
You must be logged in to post a review.
Reviews
There are no reviews yet.