ஈழ நிலத்தின் போர் திரும்பத்திரும்ப எழுதப்பட்டுக் கொண்டிருந்தாலும் துயர்களைச் தின்று செரித்த நிலத்திடம் சொல்வதற்கு ஏராளம் கதைகள் உண்டு. வரலாறு முழுவதும் ஆக்கிரமிப்புக்களின் போதெல்லாம் வீழ்வதும் பின் எழுவதுமாயிருக்கும் வன்னிக் கிராமமொன்றின் கதையிது. தொல் தெய்வங்களின் கருணையும் உக்கிரமும் உள்ளுறைந்திருக்கும் கதைகளும் மனிதர்களும் கொண்டு எழுதப்பட்டிருக்கும் யதார்த்தனின் முதல் நாவல். தொன்மத்தின் பாடல்களாலும்,நம்பிக்கைளாலும் பின்னப்பட்டிருக்கும் ஆதி நிலத்தின் நிகழ்கால மனிதர்களின் பாடுகளை,வைராக்கியத்தை,தியாகத்தை,வேட்கையை போர் ஊடறுத்த அன்றாடத்தை; எங்கள் மனமசையச் சொல்லுகின்றன யதார்த்தனின் சொற்கள்.
நகுலாத்தை
யதார்த்தன்
நாவல்
விலை:750
பக்கம்:480
Reviews
There are no reviews yet.