1952இல் வெளிவந்த, ருமேனிய நாடகாசிரியர் யூஜினது ‘நாற்காலிகள்’ நாடகத்தின் தமிழாக்கம் இது. இலங்கை வானொலியிலும் இலங்கைத் தொலைக்காட்சியிலும்(ரூபவாஹினி) நீண்டகாலம் பணியாற்றிய அனுபவம் கொண்ட விக்னேஸ்வரன் இதனை மொழிபெயர்த்திருக்கிறார். அவர் ஒத்தெல்லோ உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட நாடகங்களை வானொலிக்காகவும் மேலும் நாடகங்களை தொலைக்காட்சிக்காகவும் தயாரித்து நெறியாள்கை செய்தவர். மிகுந்த கவனத்துடனும் நுட்பத்துடனும் நாற்காலிகள் நாடகத்தை தமிழுக்குத் கொண்டு வந்துள்ளார் விக்னேஸ்வரன்.
நாற்காலிகள்
மொழிபெயர்ப்பு நாடகம்,மூலம்:இயூயின் அயனெஸ்கோ,தமிழில்:பி.விக்னேஸ்வரன்,விலை:55
vadaly –
தொடந்து, நாற்காலிகள் நாடக நூலைப்பற்றிப் பேசுகையில் அதை ஒருநாள் பொழுதில் முழுமையாக வாசிக்க முடிந்ததையும், வாசித்து முடிந்ததின் பின்னர் மனதில் எழுந்த சோகம்> நாடகத்தின் இறுதியில் மேடையில் வெறுமனே இருக்கும் கதிரைகளும், கலைந்துபோன அலங்காரத்தின் எச்சங்களும் எழுப்பிய வெறுமை என்பனவற்றை சொல்லி> அயனஸ்கோ இந்த நாடகத்தை அபத்த நாடகம் என்றில்லாமல் “Tragic Farce” என்றே குறிப்பிட்டிருக்கிறார் என்று சொன்னேன்..
பிரெஞ்சிய காலனி ஆட்சியில் அல்ஜீரியாவில் பிறந்த அல்பெயர் காமு (Albert Kamus என்ற தத்துவ சிந்தனையாளர், நோபெல் இலக்கியப் பரிசை பெற்றவர் எழுதிய The Myth of Sisyphus” என்ற உரைநூலில் குறிப்பிட ஒருகிரேக்க ஐதீகக்கதையில் வரும் ஒரு பாத்திரம் கடவுள்களின் சாபத்தின் விளைவாக ஒரு பெரிய பாறங்கல்லை மலை உச்சிக்கு உருட்டிக்கொண்டு போவதும் பிறகு அதை மலையடிவாரத்திற்கு உருண்டு வர விடுவதும், மீண்டும் உச்சிக்கு கொண்டு போவதும், மீண்டும் அடிவாரத்துக்கு விழ விடுவதுமாக தொடர்ந்து அதையே செய்து கொண்டிருக்கிறது. இருத்தலியலின் அபத்த தத்துவத்தை இந்த கதை மூலமாக விளக்குகிறார் காமூ என்பதை சொல்லி, பெக்கெற்றின் “Waiting for Godot” நாடகத்தை பார்த்த காத்திருப்பின் அருமையை உணர்ந்த சிறைக்கைதிகள் கண்ணீர் விட்டதையும், அதேபோல முதுமை தரும் தனிமை, வெறுமை பற்றி உணரத்தொடங்கியுள்ள என்னை நாற்காலிகள் நாடகம் பாதித்ததையும் சொல்லி முடித்தேன்..
-K.S.Balachandran
http://ksbcreations.blogspot.com/2012/