நீண்ட காத்திருப்பு
கொமடோர் அஜித் போயகொட
சொல்லக் கேட்டு எழுதியது – சுனிலா கலப்பதி
தமிழில்: தேவா
நவீன கிட்லர்களின் கீழ் அடக்குமுறையாளர்களின் கீழ் இராணுவ ஆட்சிகளில் கூட – ஆளும் வர்க்கத்துடன் மௌனமாய் உடன்பட்டவர்களாலோ தத்தம் வேலையைப் பார்த்தவண்ணம் கடந்து செல்பவர்களாலோ அன்றி – தமது வரையறைகளுக்குள்ளும் தமக்கு நியாயமெனப் பட்டதை செய்பவர்களாலேயே மனித உயிர்கள் காப்பாற்றப்படுகின்றன. அரசியந்திரத்தால் அனுமதிக்கப்பட்ட கலவரங்களின் கீழ் அயலவர்-அந்நியர் உதவிகளுடன் தப்பியவர்களிடமிருந்து அத்தகைய பல கதைகள் எம்மிடமும் உண்டு. கொமடோர் அஜித் போயாகொடவின் நூலின் மையக் கூறும் அது தான். போரில் தனிமனிதர்களின் பங்கு என்ன என்பது நூலினது ஆதார வினாவாக அவரது பணிவாழ்வின், சிறைவாழ்வின் அனுபவங்கள் ஊடாக விரிகிறது.
vadaly –
“ சிறை – நாங்கள் எல்லோருமே ஏதோ ஒரு சிறையினுள்தான் எப்பொழுதும் வாழ்ந்தபடி உள்ளோம். என்று நாம் சிறிய அளவுகொண்ட இடப்பரப்பினுள் அடைபடுகின்றோமோ அன்றுதான் சிறையை உணர்கிறோம்.
கொமடோர் போயாகொடவின் A Long Watch பிரதியின் வாசிப்பனுபவமும் இவ்வாறானதாகத்தான் அமையப்போகின்றது.
ஈழப்போர் வரலாற்றில் அஜித் போயகொட எழுதியிருக்கும் நீண்ட காத்திருப்பு மனச்சாட்சியின் குரலாக ஒலித்துக்கொண்டிருக்கும்.
இதனை மொழிபெயர்த்தவர்களுக்கும் வடலி வெளியீட்டினருக்கும் எமது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
https://noelnadesan.com/2020/03/26/%E0%AE%85%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AF%80/
vadaly –
19.09.1994 அன்று ஸ்ரீலங்கா கடற்படையின் சாகரவர்த்தனா போர்க்கப்பல் மன்னார் கடற்பரப்பில் மூழ்கடிக்கப்பட்டது. நான்கு கரும்புலிகளின் உயிர்கள் பலியாக,இரண்டு கடற்படையினர் கடலில் தத்தளிக்கும் நிலையில் உயிருடன் பிடிபடுகின்றனர். அரசாங்கத்திற்கு ஆயுதங்களும் பெறுமதியான கப்பலும் இழப்பு ஏற்பட்டது.இந்தச் செய்தியை அப்போது நாளிதழில் படித்திருந்தேன். பொதுமக்களாகி நாம் அதை எப்படி நோக்கினோம்-உணர்ந்தோம் என்பதையும் இப்புத்தகத்தில் போயகொட சம்பவங்களைச் சொல்லும் போது அப்பொழுதிற்கும் எழுதப்பட்ட சம்பவங்களுக்குமாகத் தொடர்புகள், அன்றைய சூழ்நிலை எனச் செய்திகள் நினைவுக்கு வருகின்றன. சிறை வைக்கப்பட்ட இடங்கள், கிளாலிப்பாதை, பத்திரிகைச் செய்திகள், புலிகளால் சிறை வைக்கப்பட்ட பொதுமக்களின் மீதான சித்திரவதைகளுக்கும் இவர்களது பராமரிப்பிற்குமான வேறுபாடுகள் என இதைப்படிக்கும் போது அறிந்த விடயங்களை அசை போடுகின்றது மனம்.
– தர்மினி (தூமை)
https://thoomai.wordpress.com/2020/03/13/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/
vadaly –
குரூரமான பயங்கரங்களோ, பரபரப்பான சாகச நிகழ்ச்சிகளோ இந்த நூலில் கிடையாது. ஆதிக்கத்தையும் அட்டூழியத்தையும் செய்யும் அதிகாரமும் பதவியும் இருந்த சூழ்நிலையிலும் நெறிமுறைகளைக் கடைப்பிடித்து மனிதாபிமானத்தோடு நடக்க முடியும் என்பதற்கான உதாரணமாக அஜித் போயகொட தெரிகிறார். அதேவேளையில், யுத்தக் கைதியாக அத்தனை வசதிகளும் ஒரே இரவில் பறிக்கப்பட்டு, மிகத் தாழ்ந்த நிலையில் வாழும்போதும் சக கைதிகளிடம் மட்டுமல்ல; தன்னைச் சிறை வைத்தவர்களிடமும் நல்லுணர்வையும் மதிப்பையும் பெற்றவராக அவர் இருந்திருக்கிறார்.
ஒரு மனிதனின் உண்மையான வீரம் என்பது, எத்தகைய சூழ்நிலையிலும் அவன் அனுசரிக்கும் சத்திய உணர்வு, தார்மீகத்தைக் கொண்டு மதிப்பிடப்பட வேண்டியது. அதை அஜித் போயகொடவின் இந்த நூல் திரும்பவும் நினைவூட்டுகிறது.
– ஷங்கர்ராமசுப்ரமணியன்,தஹிந்து
https://www.hindutamil.in/news/literature/678772-book-review-2.html
vadaly –
“நீண்ட காத்திருப்பு”
ஈழப்போர் சார்ந்த அனுபவ, சுயசரித நூல்கள் ஏராளம் வெளிவந்துவிட்டன. பல அனுபவங்கள் புனைவாக வெளிப்பட்டிருக்கின்றன. பல புனைவுகள் அனுபவங்களாக வெளிப்பட்டிருக்கிறன. தமிழ் தரப்பில் எழுதப்பட்டதுபோலவே சிங்களத் தரப்பிலும், குறிப்பாகப் படை அதிகாரிகளின் அனுபவங்களாகப் பல நூல்கள் வெளிவந்திருக்கின்றன. அவற்றிலிருந்து மிகவும் வேறுபட்ட அனுபவத்தை நீண்ட காத்திருப்பு வாசிப்பு கொடுத்திருக்கிறது.
https://www.padalay.com/2020/04/blog-post_13.html