அரசியற் தீர்க்கதரிசனங்கள், இராணுவ வெற்றிகளுக்கு அப்பால், போரினுள் அன்பையும் கருணையையும் வேண்டும் மனித இனத்தின் குரலாக, விரட்டப்படும் சனங்களின் அவலத்தின் சிறு ஒலிப்பாக கருணாகரனின் கவிதைகள் உள்ளன. வன்னிக்கான தொடர்புகளை யுத்தம் முற்றாக அழிக்குமுன் கிடைக்கப் பெற்ற அவரது கவிதைகளது தொகுப்பு அவருடன் தொடர்புகள் துண்டிக்கப்பட்ட யுத்த காலத்தினில் வெளிவந்தது.
-வடலி (2009)
vadaly –
அகதி நிலை, சிறை வாழ்க்கை, கணவன்மார்களை இழந்த கைம்பெண்கள், தாய்தந்தையரை இழந்த பிள்ளைகள், பிள்ளைகளை இழந்த தாய்தந்தையர், ஊனமுற்ற போராளிகளின் வாழ்க்கைப் போராட்டம், போராளிப் பெண்களின் பிரச்சினைகள், சொந்த நிலங்களை இழந்து பிறிதோர் இடத்தில் வாழ நேரிடும் அவலம், இராணுவப்பிரசன்னம், போரின் பின்னர் சமூகத்தில் ஏற்படும் சமூகச் சீரழிவு, பண்பாட்டுச் சீரழிவு போன்றவை இன்றைய ஈழத்து இலக்கியச் செல்நெறியின் பாடு பொருளாகியுள்ளன. இவை போருக்குப்பின்னரான இலக்கியங்கள். ஏராளமான சிறுகதைகளும் கவிதைகளும் சிலநாவல்களும் வெளிவந்துள்ளன. குறிப்பாக அதிக கவிதைத் தொகுதிகள் போருக்குப் பின்னரான விடயப் பரப்பைக் கொண்ட தொகுதிகளாக வெளிவந்துள்ளன.
கருணாகரன் யுத்தகளத்தில் போராளியாக இருந்தவர். தற்போது அவரது அந்த நிலைமை மாறி போரின் சரி பிழைகளை விமர்சிக்கும் கவிதைகளை எழுதிவருகிறார். யுத்தம் பற்றிய சிறந்த ஆவணமாக இவரது பலி ஆடு, எதுவுமல்ல இதுவும் போன்றவை திகழ்கின்றன.
தி. ஞானசேகரன்
(அவுஸ்திரேலியா – கன்பராவில் நடைபெற்ற கலை இலக்கியம் – 2016 நிகழ்ச்சியில்)
http://www.tamilmurasuaustralia.com/2016/06/2016_13.html