பதினைந்து கதைகள் அடங்கிய இத்தொகுதி பல தளங்களில் முக்கியமானது. திரும்பிப் பார்த்தல் என்பதற்ற போர்க்களத்தில் உரிய வேளையில் துப்பாக்கி ஒரு கணம் தாமதித்தாலும் தம் உயிர் மௌனித்துவிடும் ஆபத்து நிறைந்ததான களங்களில் இந்தப் பெண்கள் எவ்வளவு லாவகமாக “எதிரியை ” எதிர்கொண்டார்கள், உயிரைத் துச்சமென மதித்து தாம் நம்பிய விடுதலைக்காகப் போராடினார்கள், கூடவே ‘வெளியில்’ மரபான சமூகத்தால் மலரிலும் மென்மையானதென அணுகப்பட்ட உடல் உறுப்புகள் – எவ்வாறு தமக்கான மரபான பணிகளை மீறி “வழமை”யை உடைத்து இயங்கின – என்பதைக் காப்பரண்களும் வேலிகளும் போட்ட காந்தள் விரல்களால் எழுதிச் செல்கிறார் மலைமகள்.
Reviews
There are no reviews yet.