2007 ஆம் ஆண்டு வவுனியாவிலுள்ள அவரது வீட்டில் வைத்து தன் 7 வயது மகனின் முன்னால் கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட, கவிஞரும் ஊடகவியலாளருமான எஸ்போஸ் எனப்படும் சந்திரபோஷ் சுதாகரின் படைப்புகள் விமர்சனங்கள் அடங்கிய முழுத் தொகுதி. தன் கையை மீறிப் போய்விட்ட அல்லது தன்னால் கட்டுப்படுத்தவியலாத அதிகாரத்தின் அச்சுறுத்தல் குறித்து ஒரு சாதாரண மனிதன் செய்யக் கூடியது என்ன? தன் சிறுவத்தை இளமையைத் தின்று துப்பிவிட்டுத் தசாப்தங்களாய்த் தொடர்ந்த யுத்தம் மற்றும் அதிகார மையங்களினால் தீர்மானிக்கப்பட்ட தன் வரலாற்றின் மனிதராய் எஸ்போஸ் தொடர்ந்து அதிகாரத்தை வெறுப்பவராகவும் கேள்வி கேட்பவராகவும் தனது பிரதிகளில் உழன்றிருக்கின்றார். இதற்காய் தான் ஒரு நாள் தண்டிக்கப்படலாம் எனும் அச்சமும் பதைபதைப்பும் இருப்பினும் ‘என்னைப் பேச விடுங்கள்‘ என்பதாயே அவரது குரல் ஒலித்திருக்கிறது.
எஸ்.போஸ்.படைப்புகள்
எஸ்.போஸ் பற்றியும் அவரது படைப்புகள் பற்றியும்,கவிதைகள்,கட்டுரைகள்,பேட்டிகள்,ஆசிரியர் தலையங்கங்கள்,விமர்சனங்கள்,தொகுப்பு: கருணாகரன்,ப.தயாளன்,சித்தாந்தன்
Reviews
There are no reviews yet.